அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொரோனா வைரஸ் தொடர்பாக அறிவியல் அடிப்படையிலான இணையதளம் தொடக்கம்

Posted On: 13 APR 2020 6:40PM by PIB Chennai

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் நாட்டை  அதிவேக விகிதத்தில் தாக்கி வரும் நிலையில், நாட்டில் உள்ள விஞ்ஞானிகளும், பொறியியலாளர்களும் இந்தத் தொற்றுநோயின் அனைத்து அம்சங்களையும் புரிந்து கொள்ள இதுவரை கண்டிராத அளவில் தங்களுக்குள் ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர்.

இந்தத் தொற்றுப் பரவலின் அறிவியல் ரீதியான மற்றும் உண்மையான அம்சங்களை பொதுக்களத்திற்குக் கொண்டு வருவதற்கென, `கோவிட்ஜியான்எனப்படும் பல நிறுவன, பல மொழி அறிவியல் தொடர்பு முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முன்முயற்சி டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், (TIFR), இந்திய அறிவியல் நிறுவனம் (IISC) மற்றும் டாடா நினைவு மையம் (TMC) ஆகியவற்றின் சிந்தனையில் அடிப்படையில் உருவானதாகும். இந்த உன்னத முயற்சியில் முக்கியமான பல பங்களிப்பாளர்களும் இணைந்துள்ளனர்.

 

இந்த முன்முயற்சியின் விளைவாக 2020 ஏப்ரல் 03 அன்று  ஒரு வலைத்தளம் தொடங்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்ததுள்ளது. கோவிட்ஜான் என்று பெயரிடப்பட்ட இந்த வலைத்தளம் கோவிட்-19 தாக்குதல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஆதாரவளங்களின் தொகுப்பை ஒன்றிணைக்கும் மையமாக செயல்படுகிறது.

கோவிட் பற்றிய தகவல்களின் உண்மையான ஆதாரமாக இருப்பதுடன் மட்டுமின்றி, பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த வலைத்தளத்தின் முதன்மை நோக்கமாகும்; இந்த நோயைப் புரிந்துகொள்வதற்கும் அதைத் தணிப்பதற்குமான சாத்தியமான வழிமுறைகளுக்கு ஒரு முழுமையான அணுகுமுறையைக் கொண்டுவருவதும் இதன் நோக்கமாகும். இந்த வலைத்தளத்தின் முகவரி: https://covid-gyan.in

இதற்கிடையில், மற்றொரு புதிய முன்முயற்சியாக, பெங்களூரை மையமாகக் கொண்ட முதல் நிலை உயிரணு அறிவியல் மற்றும் மறுதுளிர்ப்பு மருத்துவ நிறுவனம் (The Institute for Stem Cell Science and Regenerative Medicine - inStem), உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையம் (The National Centre for Biological Sciences - NCBS), ஆகிய இரண்டு பெரிய அறிவியல் நிறுவனங்களின் மாணவத் தன்னார்வலர்கள் பல உள்ளார்ந்த தகவல் தொடர்பு வழிமுறைகளையும் உதவிக் குழுக்களையும் உருவாக்கியுள்ளனர். கோவிட்-19 தொற்றுநோய் குறித்து சமூகத்தில் நிலவி வரும் அச்சங்கள், கவலைகளுக்கு இவை பதிலளிப்பதாக அமையும்.

தொடர்புக்கு: தகவல்தொடர்பு அலுவலகம், உயிரியல் அறிவியல் மையம் - NCBS

அமிதா திரிபாதி, மின்னஞ்சல்: tripathya@instem.res.in

மஹின் அலி கான், மின்னஞ்சல்: mahinnak@ccamp.res.in



(Release ID: 1614237) Visitor Counter : 162