ரெயில்வே அமைச்சகம்
வீட்டு சமையலறைகள் செயல்படவும், விவசாயிகள் உதவி பெறுவதை உறுதிப்படுத்தவும் ரயில்வே மிகப்பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
13 APR 2020 6:50PM by PIB Chennai
நாட்டின் அனைத்துக் குடும்பங்களிலும் சமையலறைகள் தொடர்ந்து இயல்பாகச் செயல்படுவதையும், விவசாயத்திற்கான இடுபொருட்களை விவசாயத்துறையில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து பெறுவதையும் உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 12 நாட்களில், அதாவது ஏப்ரல் 1 ம் தேதி முதல் 12 தேதி வரை, ரயில்வே துறை 36,724 வேகன்களில் உணவுப் பொருட்களையும், 861 வேகன்களில் சர்க்கரையையும், 1,753 வேகன்களில் உப்பையும், 606 டேங்குகளில் சமையலுக்கான எண்ணையையும் 14,317 வேகன்களில் உரங்களையும் ஏற்றி நாடு முழுவதிலும் கொண்டு சென்றுள்ளது. (ஒரு வேகனின் கொள்ளளவு 58 முதல் 60 டன்கள் ஆகும்.)
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் 12 நாட்களில் அத்தியாவசியப் பொருட்களை வேகன்களில் ஏற்றி கொண்டு செல்வது, தேவையான இடங்களில் இறக்குவது ஆகியவை முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த சரக்குகளுக்கான சிறப்பு ரயில் வண்டிகளுக்கென 63 பயண வழிகளை இந்திய ரயில்வே துறை கண்டறிந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்தும் இணைக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் பொருட்களைக் கொண்டு செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் குவாஹாத்தி நகரத்துடன் முறையான தொடர்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேவை குறைவாக இருக்கும் இடங்களுக்கும் கூட இந்த ரயில்கள் செல்கின்றன. இதன்மூலம் நாட்டின் எந்தவொரு பகுதியும் தொடர்பற்று இருப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு சரக்கு ரயில்கள் தொடர்பான விவரங்களைக் கீழ்கண்ட இணையதள இணைப்பை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள முடியும்:
https://enquiry.indianrail.gov.in/mntes/q?opt=TrainRunning&subOpt=splTrnDtl
(வெளியீட்டு அடையாள எண்: 1614236)
வருகையாளர் எண்ணிக்கை : 179