நித்தி ஆயோக்

அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம், நித்தி அயோக் மற்றும் தேசிய தகவல் மையம் கூட்டாக இணைந்து அடல் டிங்கரிங் ஆய்வுக் கூட பள்ளிகளில் கொலாப் கேட் மென்பொருளை அறிமுகப்படுத்துகின்றன

Posted On: 13 APR 2020 3:56PM by PIB Chennai

அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம், நித்தி அயோக்  மற்றும் தேசிய தகவல் மையம் இன்று கூட்டாக இணைந்து கணினி மூலம் இயக்கப்படும் கொலாப் கேட் என்ற மென்பொருள் அமைப்பை அறிமுகப்படுத்தியது.  இருபரிமான வரைவு மற்றும் விவரம்  முதல் முப்பரிமான பொருள் வடிவமைப்பு வரை மொத்த பொறியியல் தீர்வை இந்த மென்பொருள் வழங்குகிறது.

இந்த முயற்சியின் நோக்கம், நாடு முழுவதும் உள்ள அடல் டிங்கரிங் ஆய்வுக் கூட பள்ளிகளில்  மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் கற்பனையை மேம்படுத்தும் வண்ணம், முப்பரிமான வடிவமைப்புகளை உருவாக்கவும் மாற்றியமைக்கவும் ஒரு சிறந்த தளத்தை உருவாக்குவதாகும். இந்த மென்பொருள், மாணவர்களுக்கு வலை தளங்களில் தகவல்களை உருவாக்க உதவும் அதே நேரத்தில் அந்த தகவல்களை சேமிக்கவும் காட்சிப்படுத்தவும் உதவும்.

•••••••••••••••


(Release ID: 1614023) Visitor Counter : 207