அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அசாம் கிராமப்புற மக்கள், கோவிட்-19 தடுப்புக்குத் தேவையான கை கிருமிநாசினிகள், முகக்கவச உறை ஆகியவற்றை வீட்டிலேயே தயாரிக்கின்றனர்.

Posted On: 13 APR 2020 11:16AM by PIB Chennai

ஜோர்ஹாட்டில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-வடகிழக்கு அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் கீழ், அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கல்வி தொழில்முனைவு மேம்பாட்டிற்கான SEED (The Society for Educational and Entrepreneurship Development) பிரிவின் ஆதரவில் செயல்படும் கிராமப்புற பெண்கள் தொழில்நுட்பப் பூங்கா, கை கிருமிநாசினி, வீட்டில் தயாரிக்கும் முகக்கவச உறை, திரவ கிருமிநாசினி போனறவை தயாரிப்பதில் கிராமப்புறப் பெண்களை ஈடுபடுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் கோவிட்-19 பரவுதலைத் தடுக்கும் வகையில், சுற்றுப்புற கிராமங்களில் குடும்பத்தினர் மற்றும் ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக இவை தயாரிக்கப் படுகின்றன.

பாரம்பரியமான பருத்தித் துணியில் இருந்து, எளிதாக முகக்கவச உறை தயாரிக்க அந்தப் பகுதி கிராமப்புறப் பெண்களுக்கு, தொழில்நுட்பப் பூங்கா மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. முகக்கவச உறைகளுக்கான வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு,  பருத்தி நூலால் நெய்யப்பட்ட 150 துண்டுகள் கொள்முதல் செய்து, இரண்டு தையல் இயந்திரங்களும் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. (ஒரு துண்டில் இருந்து 6 முகக்கவச உறைகளைத் தயாரிக்க முடியும்.)

ஒரு முகக் கவச உறை தைப்பதற்கு அந்தப் பெண்களுக்கு ஊதியமாக ரூ.15/- தருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 200 லிட்டர் அளவுக்கு திரவ கிருமிநாசினியும் இவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

 

[மேலும் விவரங்களுக்கு: திரு. ஜதின்கலிட்டா, முதன்மை விஞ்ஞானி, சி.எஸ்.ஐ.ஆர்.-நெய்ஸ்ட், ஜோர்ஹட், மின்னஞ்சல்:: kalitajk74[at]gmail[dot]com, செல்போன்:  +91-9435557824.

டாக்டர் இந்து பூரி, விஞ்ஞானி ‘F’, DST, மின்னஞ்சல்: indub.puri[at]nic[dot]in, செல்போன்:  9810557964.



(Release ID: 1613844) Visitor Counter : 106