ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

பிரதமரின் மக்கள் மருந்தக மையத்தினர் கொரோனாவை எதிர்க்க - போர் வீரர்கள் போல செயல்படுகின்றனர் - மாண்டாவியா

Posted On: 12 APR 2020 5:21PM by PIB Chennai

தற்போதுள்ள கடினமான சூழ்நிலைகளிலும் பிரதமரின் மக்கள் மருந்தக மையத்தினர் (ஜன ஔஷாதி கேந்த்ரா), கொரோனாவை எதிர்க்க போர் வீரர்களைப் போல செயல்பட்டு நாட்டுக்கு சேவையாற்றி வருகிறார்கள் என்று மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டாவியா கூறியுள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நாடு முழுக்க 6300 மக்கள் மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்துகள் விற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இப்போதைய சூழ்நிலையை சமாளிப்பதற்கு, அதன் கிடங்குகள் போர்க்கால அடிப்படையில் இரவு, பகலாகப் பணியாற்றி வருவதாகவும் திரு. மாண்டாவியா குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுக்க 726 மாவட்டங்களில் 6300 மக்கள் மருந்தகங்கள் தற்போது இயங்கி வருகின்றன.

குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய, குருகிராமில் உள்ள ஒரு கிடங்கு, குவாஹத்தி மற்றும் சென்னையில் உள்ள இரண்டு பிராந்தியக் கிடங்குகள் மற்றும் சுமார் 50 விநியோகஸ்தர்கள் முழு செயல் திறனுடன் இயங்கி வருவதாக அவர் கூறியுள்ளார். மருந்துகள் வழங்கலைக் கட்டுப்படுத்துவதற்கு, எஸ்.ஏ.பி. அடிப்படையிலான, தொடக்கம் முதல் இறுதி நிலை வரையிலான விற்பனையை கண்காணிக்கும் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு அருகில் மக்கள் மருந்தகம் எங்கு உள்ளது, தங்களுக்கு வேண்டிய மருந்து அங்கு இருக்கிறதா, அதன் விலை என்ன என்பது போன்ற விவரங்களை சாமானிய மக்கள் அறிந்து கொள்ள வசதியாக,  ஜன ஔஷாதி கேந்த்ரா (Jan Aushadhi Sugam) என்ற செல்போன் செயலி வசதியும் இருக்கிறது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஐ ஃபோன் ஸ்டோர் (I-phone Store) -களில் சென்று இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


(Release ID: 1613693) Visitor Counter : 244