பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
பிரதமரின் உஜ்வாலா யோஜனா பயனாளிகள் 85 லட்சம் பேருக்கு ஏப்ரல் மாதத்தில் எல்பிஜி சிலிண்டர் கிடைத்துள்ளது
Posted On:
12 APR 2020 1:50PM by PIB Chennai
கோவிட் 19 நிலைமைகளை, பொருளாதார ரீதியாக எதிர்கொள்ளும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா (PMGKY) என்ற திட்டத்தின் கீழ், ஏழை மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார நிலைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை எதிர்கொள்ளும் ஏழை மக்களின் சிரமங்களைப் போக்குவதே இதன் நோக்கமாகும். இத்திட்டத்தின்கீழ் மூன்று மாத காலங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் 2020 வரையிலான காலத்தில், பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு, இலவசமாக எல்பிஜி சிலிண்டர்கள் திரும்ப நிரப்படும்.
பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எல்பிஜி சிலிண்டர் பெறும் வசதிக்காக 7.15 கோடி பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகளின் கணக்கில் 5606 கோடி ரூபாயை, எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் செலுத்தத் துவங்கியுள்ளன. இந்த மாதம், 1.26 கோடி சிலிண்டர்கள், பயனாளிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ஏற்கனவே 85 லட்சம் சிலிண்டர்கள் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டன.
நாட்டில் மொத்தம் 27.87 கோடி எல்பிஜி நுகர்வோர் உள்ளனர். இதில் 8 கோடிக்கும் அதிகமானோர் உஜ்வாலா திட்டப் பயனாளிகள். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து, தினந்தோறும், நாட்டில் 50 முதல் 60 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காலத்தில், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, எல்பிஜி சிலிண்டர்களை விநியோகிக்கும் பணியாளர்களும், எல்பிஜி சிலிண்டருக்கான பொருள் வழங்கு தொடரில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்களும், சுத்தமான எரிவாயு, மக்களை அவர்கள் இல்லங்களிலேயே நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதற்காக அயராது உழைத்து வருகிறார்கள்.
(Release ID: 1613606)
Visitor Counter : 340
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam