அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட்-19 ஐ எதிர்த்துப் போராட புதுமையான 3D தயாரிப்புகளை தேசிய மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் NIPER-Guwahati வடிவமைக்கிறது

Posted On: 11 APR 2020 12:30PM by PIB Chennai

உலகில் தற்போதுள்ள கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் பெரும் உதவியாக இருக்கும் என உறுதியளிக்கும் இரண்டு தயாரிப்புகளை கவுஹாத்தி தேசிய மருந்தகக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் (NIPER-G) கொண்டு வந்துள்ளனர்.

முதல் தயாரிப்பு ஒரு முப்பரிமாண முறையில் (3D) அச்சிடப்பட்ட கைகள் படாமல் உபயோகிக்கும் (Hands-free) பொருளாகும், இது கதவுகள், ஜன்னல்கள், இழுப்பறைகள் (செங்குத்து மற்றும் கிடைமட்ட இரண்டும்), மற்றும் குளிர்சாதன பெட்டி கைப்பிடி, அல்லது தானியங்கி உயர்த்தியின் (Elevator) பொத்தான்கள் மற்றும் மடிக்கணினி / கணினி விசைப்பலகைகள் ஆகியவற்றைத் திறக்க அல்லது மூட உதவும். அத்துடன் சுவிட்ச்சுகளை இயக்கவும் பயன்படும்.

இரண்டாவது தயாரிப்பு முப்பரிமாண முறையில் (3D) அச்சிடப்பட்ட நுண்ணுயிரை எதிர்க்கும் முகக்கவசமாகும், இது புதிதாக வந்துள்ள கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துகிறது. வாய், கண், மூக்கு மற்றும் பிற உடல் துவாரங்கள் மூலம் வைரஸ்கள் எவ்வாறு பரவுகின்றன என்ற முழுமையான ஆய்வுக்குப் பிறகு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

*****



(Release ID: 1613296) Visitor Counter : 184