உள்துறை அமைச்சகம்

கோவிட்-19 வைரஸை எதிர்கொள்வதற்குப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவிலிருந்து கடல் மீன்பிடித்தல்/மீன்வளர்ப்புத் தொழில் செயல்பாடுகளுக்கு விலக்கு அளித்து 5-வது பிற்சேர்க்கையை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்

Posted On: 10 APR 2020 10:38PM by PIB Chennai

கோவிட்-19 வைரஸை எதிர்கொள்ளும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்பாக அனைத்து அமைச்சகங்கள்/ துறைகளுக்கு வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த வழிமுறைகளில் ஒரு பிற்சேர்க்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. (https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1607997)

 

5-வது பிற்சேர்க்கையின்படி, ஊரடங்கு விதிகளிலிருந்து மீன்பிடித்தல் (கடல்)/ மீன்வளர்ப்பு தொழில் செயல்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இதில், உணவு அளித்தல் மற்றும் பராமரிப்பு, மீன்பிடித்தல், பதப்படுத்துதல், பெட்டிகளில் அடைத்தல், குளிரூட்டி மையச் செயல்பாடுகள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்; குஞ்சு பொறித்தல், உணவு தயாரிப்பு ஆலைகள், வர்த்தக ரீதியான மீன் காட்சியகங்கள், மீன்/இறால் மற்றும் மீன் பொருள்கள், மீன் குஞ்சுகள் ஆகியவற்றை எடுத்துச் செல்தல் மற்றும் பணியாளர்கள் பயணம் மேற்கொள்தல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.(Release ID: 1613255) Visitor Counter : 17