ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
கொவிட்-19 நிவாரணப் பணிக்காக ரூ. 86.5 லட்சத்தை உள்ளாட்சி அமைப்புகள்/அரசுகளுக்கு மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழக நிறுவனங்கள்/மையங்கள் அளித்தன
தங்கள் ஒரு நாள் ஊதியமான ரூ. 18.25 லட்சத்தை பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழக ஊழியர்கள் அளித்தனர்
Posted On:
10 APR 2020 2:00PM by PIB Chennai
கொவிட்-19 பெரும் தொற்று நோய்க்கு எதிரான போரில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சிகள் மற்றும் மாநில அரசுகளின் முயற்சிகளை ஆதரிப்பதற்காக ரூ. 85.50 லட்சத்தை ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய அரசு நிறுவனமான மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் அளித்தது. அத்துடன், தங்களது ஒரு நாள் ஊதியமான ரூ. 18.25 லட்சத்தை பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் பேரிடர் கால நிவாரண (பிஎம் கேர்ஸ்) நிதியத்துக்கு மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் அனைத்து ஊழியர்களும் இணைந்து அளித்தனர்.
கொவிட்-19 பரவுதலைத் தடுக்க இந்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தைத் தொடர்ந்து ஏழைகள், பின்தங்கியுள்ளோர் மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் அளிப்பதன் மூலம் அவர்களின் துன்பங்களைக் களைய மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் நிதியுதவி பயன்படும்.
***
(Release ID: 1612959)
Visitor Counter : 145
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada