தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

கோவிட் 19 நோய்க்கு எதிரான சூழலில் ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுப்பதற்காக வந்த கோரிக்கைகளில் 1.37 லட்சம் கோரிக்கைகள் ஏற்பு

Posted On: 10 APR 2020 1:17PM by PIB Chennai

கோவிட்19 நோய்க்கு எதிராக ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக, ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்தையடுத்து, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஊழியர் வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎப்ஓ), நாடு முழுவதுமிருந்து பெறப்பட்ட 1.37 லட்சம் கோரிக்கைகளை ஏற்று 279.65 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இத்தொகையை வாடிக்கையாளர்களின் கணக்கில் செலுத்தும் நடவடிக்கைகளும் துவங்கப்பட்டுள்ளன. முற்றிலும் கே.வை.சி (KYC) முறைப்படி உள்ள அனைத்து விண்ணப்பங்களும், 72 மணி நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு விடுகின்றன. வேறு பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ள உறுப்பினர்களும், உலகளாவிய, இந்த கோவிட்19 நோய்க்கு எதிரான பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு உறுப்பினரின் கேவைசி நிலைமைகளையும் பொறுத்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, கோரிக்கைகள் அனைத்தையும் விரைந்து முடிக்க, எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகளாவிய கோவிட்19 நோய்க்கு எதிரான பிரிவில், முன்பணம் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள், ஆன்லைன் மூலமாக, பதிவு செய்யப்படுகின்றன. எனவே, ஒவ்வொரு ஈபிஎஃப் கணக்கும் கேவைசி முறைப்படி இருந்தாக வேண்டும் என்பது முன்னதாகவே உறுதிப்படுத்தப்படுகிறது.(Release ID: 1612892) Visitor Counter : 114