விவசாயத்துறை அமைச்சகம்

மத்திய வேளாண் துறை அமைச்சர் மாநில வேளாண் துறை அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப்பின் எடுக்கப்பட்ட முடிவுகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு தெரிவித்தது

Posted On: 09 APR 2020 7:54PM by PIB Chennai

 

 

கோவிட் 19 தொற்று பாதிப்பினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக விவசாயிகள், விவசாயப் பணிகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து மத்திய வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் நாட்டின் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச வேளாண்துறை அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக கீழ்க்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டு, அவை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்குப் பரிந்துரைகளாக அனுப்பப்பட்டுள்ளன. அவையாவன:

  • ஆதரவு விலை திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்களின் கொள்முதல் தொடங்கும் தேதியை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். கொள்முதல் தொடங்கும் நாளிலிருந்து 90 நாட்கள் வரை கொள்முதல் தொடரலாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • அழுகும் விவசாய மற்றும் தோட்டப் பயிர்களுக்கான விலைத் திட்டத்தை மாநில அரசுகள் செயல்படுத்தும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த விலையில் வடகிழக்கு மாநிலங்களில் 75 சதவீதத்தையும் இதர அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீதத்தையும் மத்திய அரசே ஏற்கும்.

 

இதர முன்னேற்றம்:

  • நாடு முழுதும் 7 கோடியே 92 லட்சம் விவசாயிகளுக்கு கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதியின் கீழ் இதுவரை மொத்தம் ரூ. 15,841 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
  • விதைகள், காய்கறிகள், பால், பால் பொருட்கள் ஆகிய அத்தியாவசிய உணவுப் பண்டங்களை விநியோகிக்க 109 பார்சல் ரயில்கள் இயக்கப்படும்.
  • விவசாயிகள் பயன்படுத்தும் இ-நாம் ஆப் என்ற செயலியில் பொருள் போக்குவரத்தும் இணைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியை ஏற்கெனவே 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், வர்த்தகர்கள் பயன்படுத்துகின்றனர்.


(Release ID: 1612815) Visitor Counter : 197