தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
உலகளாவிய கோவிட் 19 நோய் காலத்தின்போது, ஈ எஸ் ஐ சி மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள்
1,042 தனிமை படுக்கைகளுடன் கூடிய, எட்டு ஈ எஸ் ஐ சி மருத்துவமனைகள், கோவிட் 19 நோய்க்கான அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவமனைகளாக அறிவிப்பு
Posted On:
09 APR 2020 5:02PM by PIB Chennai
கோவிட் 19 நோய் காரணமாக, மிக சவாலான சூழ்நிலையை நாடு தற்போது எதிர்கொண்டு வருகிறது. தனிநபர் விலகியிருத்தலை உறுதிப்படுத்துவதற்காக, நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நெருக்கடியை சமாளிப்பதற்காக தொழிலாளர் மாநிலக் காப்பீட்டுக் கழகம் (Employees State Insurance Corporation – ESIC) பயனாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ESIC மருத்துவமனைகளில் 1042 தனிமை படுக்கைகள் கொண்ட, கீழே குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனைகள், கோவிட் 19 நோய் சிகிச்சைக்கென அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவமனைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- ஈ எஸ் ஐ சி மருத்துவமனை, அங்கிலேஷ்வர், குஜராத் 100 படுக்கைகள்
- ஈ எஸ் ஐ சி மருத்துவமனை, குருகிராம், ஹரியானா 80 படுக்கைகள்
- ஈ எஸ் ஐ சி மருத்துவமனை, வாபி குஜராத் 100 படுக்கைகள்
- ஈ எஸ் ஐ சி மருத்துவமனை, உதய்பூர், இராஜஸ்தான் 100 படுக்கைகள்
- ஈ எஸ் ஐ சி மருத்துவமனை, ஜம்மு 50 படுக்கைகள்
- ஈ எஸ் ஐ சி மருத்துவமனை, பட்டி, இமாச்சலப் பிரதேசம் 100 படுக்கைகள்
- ஈ எஸ் ஐ சி மருத்துவமனை, ஆதித்யாபூர் ஜார்கண்ட் 42 படுக்கைகள்
- ஈ எஸ் ஐ சி மருத்துவமனை, ஜோக்கா, மேற்குவங்கம் 470 படுக்கைகள்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனைகள் தவிர, நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு ஈ எஸ் ஐ சி மருத்துவமனைகளில், சுமார் ஆயிரத்து 112 தனிமை படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த மருத்துவமனைகளில் 197 செயற்கை சுவாசக் கருவிகளுடனான, மொத்தம் 555 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் (ICU Beds)/ உயர் சார்பு நிலை அலகுகளில் (High Dependency Units - HDUs) எச் டியூ படுக்கைகளும் உள்ளன.
ஃபரிதாபாத் (ஹரியானாவில்) உள்ள இ எஸ் ஐ சி மருத்துவமனையில், கோவிட் 19 பரிசோதனை வசதி செய்யப்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட இடங்களில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதி (மொத்தம் 1184 படுக்கைகள்) செய்யப்பட்டுள்ளன.
- ஈ எஸ் ஐ சி மருத்துவமனை, ஆள்வார் ராஜஸ்தான் 444 படுக்கைகள்
- ஈ எஸ் ஐ சி மருத்துவமனை, பீட்டா பாட்னா பீஹார் 400 படுக்கைகள்
- ஈ எஸ் ஐ சி மருத்துவமனை, குல்பர்கா கர்நாடகா 240 படுக்கைகள்
- ஈ எஸ் ஐ சி மருத்துவமனை, கோர்பா சட்டீஸ்கர் 100 படுக்கைகள்
கடினமான இந்த காலத்தில் ஈ எஸ் ஐ சி பயனாளிகளின் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக, ஊரடங்கு காலத்தின் போது, பயனாளிகள் தங்களின் ஈ எஸ் ஐ சி மருத்துவமனைக்கு அருகேயுள்ள தனியார் மருந்தகங்களில் இருந்து, மருந்துகளை வாங்கிக்கொண்டு, பின்னர் ஈ எஸ் ஐ சி யிடமிருந்து, அதற்கான பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 கொரோனோ நோய் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளும், நோய் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நோயாளிகளும், கோவிட் 19 நோய் சிகிச்சைக்கென அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவமனை என்று தனியாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பயனாளிகளும், அந்த மருத்துவமனைகளுக்கு அருகே தொடர்பு நிலையில் உள்ள tie up மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதியும், மாற்று மருத்துவ சேவை அளிப்பதற்கான வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. ஈ எஸ் ஐ சி மருத்துவமனை கோவிட் 19 மருத்துவமனையாகச் செயல்படும் காலம் வரை, ஈஎஸ்ஐ பயனாளிகளுக்கு, எஸ் எஸ் டி ஆலோசனை/ அட்மிஷன்/ பரிசோதனை போன்ற மருத்துவ வசதிகள் இந்த தொடர்பு நிலையில் உள்ள மருத்துவமனைகள் மூலமாக வழங்கப்படும்
(Release ID: 1612667)
Visitor Counter : 255