உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சேவை புரிவதில் அயராது பணியாற்றும் பொதுத்துறை, தனியார் விமான நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட முகமைகள்

உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மருத்துவ சரக்கு விமானப் போக்குவரத்து

Posted On: 09 APR 2020 4:55PM by PIB Chennai

கோவிட்-19 முழு ஊரடங்கு காலத்தில், ஐசிஎம்ஆர், எச்எல்எல் மற்றும் இதர நிறுவனங்களின் சரக்குகள் உள்பட அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஏர் இந்தியா, இந்திய விமானப்படை, பவன் ஹன்ஸ், இண்டிகோ, புளூ டார்ட் போன்ற உள்நாட்டு பொதுத்துறை மற்றும் தனியார் விமானங்கள், மருந்துகள், ஐசிஎம்ஆர் சரக்குகள், எச்எல்எல் சரக்குகள் மற்றும் இதரப் பொருட்களை,  ஶ்ரீநகர், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, புவனேஸ்வர் மற்றும் நாட்டின் இதர பகுதிகளுக்கு ஏப்ரல் 8-ம்தேதி எடுத்துச் சென்றன. சுகாதார அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், அஞ்சல் துறை ஆகியவற்றின் சரக்குகளை எடுத்துச் செல்வதில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் நிறைவேற்றப்படுகிறது. மேலும், பொருட்களைச் சேகரிப்பது, விமானங்களில் ஏற்றுவது, சேரும் இடங்களில் அவற்றைக் கொண்டு சேர்த்து விநியோகிப்பது வரை எல்லா நிலைகளிலும் போதிய பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

கோவிட்-19 பொது முடக்க காலத்தில் , லைப்லைன் உடான் விமானங்கள் மூலம், மொத்தம் சுமார் 248 டன் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. லைப்லைன் உடான் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் 167 விமானங்கள் இதுவரை 1,50,006 கி.மீ தூரத்திற்கு பயணித்துள்ளன.



(Release ID: 1612624) Visitor Counter : 195