அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சி.எஸ்.ஐ.ஆர் – பூனாவில் உள்ள தேசிய வேதிப்பொருள் ஆய்வுக்கூடம் (NCL) மருத்துவக் கருவிகள் உற்பத்திக்காக பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட்டுடன் இணைந்துள்ளது
Posted On:
09 APR 2020 10:46AM by PIB Chennai
அறிவியல், தொழிலக ஆராய்ச்சிக் குழுமம் (CSIR)-இன் கீழ் இயங்கி வரும் பூனாவில் உள்ள CSIR-NCL நிறுவனம் கடந்த பத்தாண்டுகளில் தனது தொழில் தொடங்குதல் மையம் மூலம் புத்தாக்கக் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைதலில் முன்னணியில் இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு எதிராகப் போராடுவதற்கு உதவக்கூடிய புதிய புத்தாக்கக் கண்டுபிடிப்புகளையும் இந்த ஆய்வுக்கூடம் வழங்கி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைப்பதற்கு உதவக்கூடிய வகையில் இந்த ஆய்வுக்கூடம் தயாரித்துள்ள அண்மைக்கால இரண்டு கண்டுபிடிப்புகள் பற்றிய விவரங்கள் கீழே தரப்படுகின்றன:
1. டிஜிட்டல் ஐஆர் தெர்மாமீட்டர்: சி.எஸ்.ஐ.ஆர்-என்.சி.எல் (CSIR-NCL) ஆய்வுக்கூடத்தின் தொழில் தொடங்குதல் மையத்தின் திரு பிரதிக் குல்கர்னி தலைமையிலான பி.எம்.இ.கே (BMEK) என்ற புத்தாக்கத் தொழில்முனைவு நிறுவனம் கையால் பயன்படுத்தக் கூடிய டிஜிட்டல் ஐ.ஆர் (Digital IR) தெர்மாமீட்டரை (வெப்பமானி) உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இது ஒரு முக்கியமான கருவியாக இருக்கிறது. இதற்கான மின்சாரத்தை மொபைல் ஃபோன் அல்லது பவர் பேங்க்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். ஐ.ஆர் தெர்மாமீட்டர்களுக்கான வடிவமைப்பு வன்பொருள் மற்றும் மென்பொருள் வடிவமைப்பு, பெரும் எண்ணிக்கையில் அப்படியே தயாரிக்கக்கூடிய வகையில், நாடு முழுவதிலுமுள்ள தயாரிப்பாளர்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. இந்த முயற்சியானது தெர்மாமீட்டர்களை தயாரிக்கக்கூடிய உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இதனால் அவர்கள் தங்களின் உள்ளூர்th தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளமுடியும். பூனாவில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட்டுன் (BEL) என்.சி.எல் பங்குதாரராகச் சேர்ந்து உற்பத்தியை இப்போது அதிகரித்துள்ளது. முன்னோட்டப் பரிசோதனைக்கு 100 மூலவடிவ தெர்மோமீட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு இவை பெங்களூரில் உள்ள டி.யு.வி (TUV) ரையின்லேண்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்டில் பரிசோதிக்கப்படும்.
2. ஆக்கிஜன் செறிவூட்டும் கருவி (OEO) – இது இரண்டாவது புத்தாக்கக் கண்டுபிடிப்பாகும். கோவிட்-19 நோயாளிகளுக்கு அவசரக்காலத் தேவைகளில் ஒன்றாக இருப்பது ஆக்சிஜன் ஆகும். ஏனெனில் இந்த நோயாளிகளின் நுரையீரல்கள் வலுவிழப்பதால் அவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. சுற்றியுள்ள காற்றில் இருக்கும் ஆக்சிஜன் அடர்த்தி அளவை 21-22% இருந்து 38-40% அளவிற்கு அதிகரிக்கக் கூடிய ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை சி.எஸ்.ஐ.ஆர் – என்.சி.எல் மற்றும் ஜென்ரிச் மெம்பரேன்ஸ் (Genrich Membranes) நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்தக் ஜென்ரிச் மெம்பரேன்ஸ் நிறுவனம் என்பது என்.சி.எல் ஆய்வுக்கூடத்தின் பாலிமர் அறிவியல், பொறியியல் பிரிவுத் தலைவர் டாக்டர். உல்ஹாஸ் கரூல் நிறுவிய புத்தாக்க ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆகும். ஆக்கிஜன் செறிவூட்டும் கருவி என்பது உள்ளீடற்ற சவ்வுத் தொகுப்பாகும். இது சுற்றியுள்ள காற்றில் இருந்து ஆக்சிஜனை பிரித்தெடுத்து வடிகட்டி மேலும் செறிவூட்டி வீட்டில் உள்ள நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு வழங்குகின்ற கருவியாகும். இதன் மூல வடிவக்கருவி பூனாவில் தயாரிக்கப்பட்டு தயாராக உள்ளது. இது பெங்களூரில் உள்ள டி.யு.வி (TUV) ரையின்லேண்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்டில் பரிசோதிப்பதற்கும், தகுந்தது என்று அங்கீகரிக்கப்படுவதற்குமாக அனுப்பப்பட இருக்கிறது. என்.சி.எல் – பெல் (NCL-BEL) பூனா ஆகியன இணைந்து 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை அசெம்பிள் செய்ய இருக்கின்றன. முன்னோட்டப் பரிசோதனைகளுக்குப் பிறகு இது அதிக அளவிலான எண்ணிக்கையில் தயாரிக்கப்படும்.
அகச்சிவப்புக் கதிரில் இயங்கும் உடலைத் தொடாமலேயே வெப்பத்தைக் கணக்கிடும் ஐந்து தெர்மாமீட்டர்கள் பூனாவின் காவல் துணைஆணையரிடம் வழங்கப்படுகிறது.
பூனாவுக்கு அருகில் உள்ள ஒரு மருத்துவ மையத்தில் மூலவடிவப் பரிசோதனையின் போது நோயாளி ஒருவரின் மூச்சுக் கவசத்தோடு ஜென்ரிச்-என்.சி.எல் Genrich - NCL ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி இணைக்கப்பட்டுள்ளது.
(Release ID: 1612495)
Visitor Counter : 275
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada