மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கோவிட்19 மேலாண்மை பயிற்சி திட்டம்: இந்திய அரசு அறிமுகம்

மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறையின் இணைய தளத்தின் தீக்ஷாவில் ஒருங்கிணைந்த அரசு ஆன்லைன் பயிற்சி வலைப்பக்கம்

Posted On: 09 APR 2020 12:24PM by PIB Chennai
உலக அளவிலான கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்த நோய் தொடர்பான பணிகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள இந்தியாவின் முதல் நிலைப்பணியாளர்கள், மிகவும் பாராட்டத்தக்க வகையில், தங்கள் பணிகளைச் செய்து வருகிறார்கள். உலக அளவிலான இந்த நோய், இனிவரும் கட்டங்களில், மிக அதிகமான அளவு தாக்கத்தை ஏற்படுத்துகையில், இந்த முதல்நிலை பணியாளர்களுக்கு மாற்றுப் பணியாளர்கள் அதிக அளவில் தேவைப்படுவார்கள். முதல்நிலைப் பணியாளர்களுக்கு வேண்டிய தேவையான பயிற்சிகள் அளிப்பதற்காக, மத்திய அரசு கோவிட் மேலாண்மைக்கான பயிற்சித்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நோய்த்தாக்குதலின் போது,, முதல்நிலைப் பணியாளர்களுக்கு, நோயைத் திறமையாகக் கையாள்வதற்கான திறன்களை அளிக்கவேண்டும் என்பதற்கான, ‘ஒருங்கிணைந்த அரசு ஆன்லைன் பயிற்சி திட்டம்’ ஐகாட் எனப் பெயரிடப்பட்டுள்ள, இந்த பயிற்சி வலைப்பக்கத்தை, மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் தீக்ஷா வலைத்தளத்தில் காணலாம். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார் பணியாளர்கள். சுகாதாரப்பணியாளர்கள். தொழில் நுட்பப் பணியாளர்கள், உதவி மருத்துவ செவிலியர்கள் (ANM) பேறுகால உதவியாளர்கள், மாநில அரசு அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள், பல்வேறு காவல்துறை அமைப்புகள், என்சிசி மாணவர்கள், நேரு யுவ கேந்திரா சங்கதன், தேசிய சேவைத் திட்டம் (NSS), இந்திய செஞ்சிலுவைச் சங்கம், பாரத சாரண சாரணியர் இயக்கம் மற்றும் இதர தன்னார்வத் தொண்டு ஊழியர்கள் ஆகியோருக்கான பயிற்சித்திட்டங்கள் ஐகாட் (igot) பயிற்சி பாடதிட்டத்தில் உள்ளன. இதற்கான வலைப்பக்க இணைப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. https://igot.gov.in/igot/. உலகளாவிய இந்த நோய் பன்மடங்கு பெருகி வரும் நேரத்தில், தேவையான வகையில் இந்த நோயை எதிர்கொள்வதற்கான, பயிற்சிகள் கற்பவர்களின் நேரத்திற்கேற்பவும், ஆன்சைட் அடிப்படையிலும் வழங்கப்படுகின்றன. *****

(Release ID: 1612489)