பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கொவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் கேந்திரிய பந்தர் தயாரித்த இன்றியமையாத பொருட்கள் அடங்கிய 2200 பைகளை டாக்டர்.ஜித்தேந்திர சிங் டில்லியில் தேவையுள்ள குடும்பங்களுக்கு விநியோகித்தார்

Posted On: 08 APR 2020 3:43PM by PIB Chennai
மத்திய அரசின் ஊழியர் நலன் மற்றும் பயிற்சித் துறையின் கீழ் (DoPT) செயல்பட்டு வரும் கேந்திரிய பந்தர் தேவையுள்ள குடும்பங்களுக்கு “இன்றியமையாத பொருட்கள் அடங்கிய பைகளை” வழங்கும் பிரத்யேகமான ஒரு நடவடிக்கையைத் தொடங்கி உள்ளது. வடகிழக்கு பிராந்திய மேம்பாடு, பிரதமர் அலுவலகம், ஊழியர் நலன் – பொதுமக்கள் குறைதீர்ப்பு – ஓய்வூதியங்கள் துறை, அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகியவற்றின் இணை அமைச்சர் (தனிப்பட்ட பொறுப்பு) டாக்டர். ஜித்தேந்திர சிங் இன்று கொவிட்-19 பெருந்தொற்று நிலவும் இந்தக் காலகட்டத்தில் தேவையுள்ள குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக இன்றியமையாத பொருட்கள் அடங்கிய 2200 பைகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதில் 1700 பைகளை மத்திய டெல்லி மாவட்டத்தின் சிவில் லைன், எஸ்.டி.எம்-மிடம் டாக்டர். ஜித்தேந்திர சிங் ஒப்படைத்தார். மீதி உள்ள 500 பைகள் டி.எம்-மிடம் (மத்தியப் பகுதி) வழங்கப்படும். தேவையுள்ள குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக 2200 பைகளை கேந்திரிய பந்தர் தயாரித்து உள்ளது. • ஒவ்வொரு பையிலும் கீழ்க்கண்ட பொருட்கள் உள்ளன: 1. அரிசி 3 கிலோ 2. கோதுமை மாவு 3 கிலோ 3. பருப்பு 2 கிலோ 4. சமையல் எண்ணெய் 1 லிட்டர் 5. மிக்சர்/அவல் 500 கிராம் 6 உப்பு 1 கிலோ 7. குளியல் சோப் 1 8. சலவை சோப் 1 9. பிஸ்கட் 3 பாக்கெட் <><><><><>

(Release ID: 1612259)