அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட் 19 பரிசோதனையில், நோய்த்தொற்றைத் துரிதமாகக் கண்டறியும் கருவிப்பெட்டியை புனேவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது

Posted On: 08 APR 2020 11:31AM by PIB Chennai
நோய்களை வேகமாகக் கண்டறியும் புதுமையான பொருள்களை உருவாக்குவதற்காக 2018இல் தொடங்கப்பட்ட புதிய நிறுவனம் (ஸ்டார்ட் அப்) ஃபாஸ்ட்சென்ஸ் டயாக்னஸ்டிக்ஸ் ( FastSense Diagnostics) என்பதாகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் நிதியுதவியைப் பெறும் இந்த நிறுவனம் தற்போது கொவிட்-19 தொற்றினைக் கண்டறிவதற்காக இரண்டு பொருள்களை உருவாக்கி வருகிறது. புற்று நோய், கல்லீரல் நோய்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் குருதியில் காணப்படும் நச்சுத்தன்மை போன்ற சிக்கலான நோய்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதற்கு ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் தனது உலகளாவிய தளமான 'ஆம்னி சென்ஸ்'( “Omni-Sens”) போன்று, கொவிட்-19க்கு என பிரத்யேகமாக கொவ்இ-சென்ஸ் (CovE-Sens )என்னும் தொழில்நுட்பத்தை இந்த நிறுவனம் முன்மொழிந்துள்ளது. நோயாளி இருக்கும் இடத்திலேயே விரைவாக, எளிதில் உபயோகிக்கக் கூடிய, சரியாகப் பரிசோதனை செய்யக்கூடிய கொவ்இ-சென்ஸ்க்கு காப்புரிமை கோரப்பட்டுள்ளது. நோயாளி இருக்கும் இடத்திலேயே பரிசோதனை செய்யக்கூடிய ஃபாஸ்ட்சென்ஸ் டயாக்னஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ( FastSense Diagnostics) கருவிப்பெட்டிகள் விரைவாகவும், அதிகம் பயிற்சி பெற்ற தொழில்நுட்பவியலாளர்கள் இல்லாத நிலையிலும் பரிசோதனைகளை செய்து, கொவிட் 19க்கு எதிரான போரில் இந்தியாவின் பரிசோதனை முயற்சிகளை பலப்படுத்தும். தேசிய நச்சுயிரி இயல் நிறுவனத்துடன் (National Institute of Virology) இணைந்து பணியாற்ற இந்தக் குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்கான செயல்திறன் மதிப்பீடு செயல்முறையில் உள்ளது. மேலும், இந்தக் கருவியின் பெருமளவிலான தயாரிப்பு மற்றும் உபயோகத்துக்காக சந்தையில் ஏற்கனவே உள்ளவர்களிடம் இந்தக் குழு தொடர்பில் உள்ளது. (மேலும் விவரங்களுக்கு: டாக்டர். பிரீத்தி நிகம் ஜோஷி, நிறுவன இயக்குநர், FastSense Diagnostics. மின்னஞ்சல்: preetijoshi@fastsensediagnostics.com , கைபேசி: 8975993781) ***

(Release ID: 1612215) Visitor Counter : 214