அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கொவிட்-19 நோயாளிகளைப் பரிசோதிப்பதற்காக கிருமி நீக்கம் செய்யப்பட்ட தடுப்பு - சோதனை அறையை உருவாக்கியுள்ளனர் SCTIMST விஞ்ஞானிகள்
Posted On:
08 APR 2020 11:38AM by PIB Chennai
கொவிட்-19 நோயாளிகளைப் பரிசோதிப்பதற்காக கிருமி நீக்கம் செய்யப்பட்ட தடுப்பு – சோதனை அறை ஒன்றை வடிவமைத்து உருவாக்கியுள்ளனர், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி பெற்ற அமைப்பான ஸ்ரீ சித்ர திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள்.
ஒரு தொலைபேசி மையத்தை போல் மூடப்பட்டு அமைக்கப்பட்டுள்ள கிருமி நீக்கம் செய்யப்பட்ட புதுமையான இந்த சோதனை அறை, நோய் தொற்றைத் தடுப்பதற்காக, மருத்துவரின் நேரடித் தொடர்பு இல்லாமலேயே நோயாளியைப் பரிசோதனை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விளக்கு, மின்விசிறி, பொருள்கள் வைப்பதற்கான செருகு சட்டம் மற்றும் புற ஊதா விளக்கு ஆகியன இதில் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் பொருத்தப்பட்டுள்ள புற ஊதா விளக்கு, ஒவ்வொரு நோயாளியும் அறையை விட்டு சென்ற பின்னர் இந்த மையத்தை கிருமிகளிடமிருந்து தூய்மைப்படுத்தும்.
பரிசோதனைக்குப் பின்னர், நோயாளி அறையை விட்டு வெளியேறக் கேட்டுக் கொள்ளப்படுவார். அதன் பின்னர், புற ஊதா விளக்கு 3 நிமிடங்களுக்கு ஒளிர வைக்கப்படும். அறையில் புற ஊதா வெளிப்பாடு முடிந்த பின்னர், அடுத்த நோயாளி பரிசோதிக்கப்படுவார். இப்படியே இது தொடரும்.
"வேகமாகத் தொற்றக்கூடிய ஒரு வைரஸைக் கொண்டு வருபவர்களிடம் தொடர்பு கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் முன்னிலை சுகாதாரப் பணியாளர்களுக்கு நோய்த் தொற்றிலிருந்து உயர் தரப் பாதுகாப்பை அளிப்பது ஒரு கட்டாய முன்னுரிமை ஆகும். அந்த வகையில், சிந்தனைத் திறனுடனும், மருத்துவர்களின் உள்ளீடுகளுடனும் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்புச் சாவடி ஒரு சிறந்த முன்னேற்றமாகும்," என்கிறார் பேராசிரியர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர், அசுதோஷ் ஷர்மா.
(மேலும் விவரங்களுக்கு தயவு செய்து அணுகவும்: ஸ்வப்னா வாமதேவன், மக்கள் தொடர்பு அலுவலர், ஸ்ரீ சித்ர திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம். கைபேசி: 9656815943. மின்னஞ்சல்: pro@sctimst.ac.in).
*******
(Release ID: 1612205)
Visitor Counter : 215
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam