பாதுகாப்பு அமைச்சகம்

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு இந்திய விமானப்படை தொடர்ந்து உதவி

प्रविष्टि तिथि: 07 APR 2020 6:29PM by PIB Chennai
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இந்திய விமானப் படை தொடர்ந்து உதவி செய்து வருகிறது. இந்தத் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக மாநில அரசுகளும், இதர ஆதரவு முகமைகளும், திறமையாகவும், பயன் தரும் வகையிலும் நடவடிக்கை எடுக்கும் வகையில், மருத்துவப் பொருட்களை இந்திய விமானப் படை கொண்டு சேர்த்து வருகிறது. கடந்த சில தினங்களில் நாட்டில் தேவைப்படுகின்ற பல்வேறு பகுதிகளுக்கு மருத்துவக் கருவிகளையும், பொருட்களையும், கொண்டு சேர்த்துள்ளது. அது மட்டுமல்லாமல், ஏப்ரல் 6 தேதி அன்று இந்திய விமானப்படை, இந்திய மருத்துவ ஆய்வு மன்றத்தின் 3500 கிலோ எடையுள்ள மருத்துவ சாதனங்களையும், ஆட்களையும் சென்னையில் இருந்து புவனேஸ்வருக்கு கொண்டு சேர்த்துள்ளது. இது ஓடிசாவில் ஆய்வுக் கூடங்களை அமைப்பதற்காகவும், மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள இந்திய விமானப்படைத் தளங்கள் தனிமைப்படுத்த படக்கூடிய முகாம்களாக மாற்றப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன ***

(रिलीज़ आईडी: 1612165) आगंतुक पटल : 182
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada