ஜவுளித்துறை அமைச்சகம்

முடக்கநிலை காரணமாக சணல் ஆலைகள் மூடப்பட்டதை அடுத்து உணவு தானியங்களை மூட்டைகளில் நிரப்புவதற்கான பிரச்சினையை சமாளிக்க HDPE/PP பைகள் தயாரிப்பதற்கான வரம்பை 1.80 லட்சம் பேல்களில் இருந்து 2.62 லட்சம் பேல்களாக ஜவுளி அமைச்சகம் உயர்த்தியது

Posted On: 07 APR 2020 7:40PM by PIB Chennai

முடக்கநிலை காரணமாக சணல் ஆலைகள் மூடப்பட்டதை அடுத்து உணவு தானியங்களை மூட்டைகளில் நிரப்புவதற்கான பிரச்சினையை சமாளிக்கவும், கோதுமை விவசாயிகளின் தேவைகளுக்கு என மாற்று பைகள் தந்து பாதுகாக்கும் நோக்கிலும், உயர் அடர்த்தி பாலி புரொபைலீன் (High density polypropylene- HDPE), புரொபைலீன் பாலிமர் (PP ) ஆகியவற்றால் ஆன நெகிழி சாக்குப்பைகளைத் தயாரிப்பதற்கான வரம்பை 1.80 லட்சம் பேல்கள் என 2020 மார்ச் 26ல் நிர்ணயித்த நிலையில், கூடுதலாக 0.82 லட்சம் வரை உற்பத்தி செய்ய 2020 ஏப்ரல் 6-ல் ஜவுளி அமைச்சகம் அனுமதி அளித்தது.

கோதுமை அறுவடை முடிந்து ஏப்ரல் மத்தியில் மூட்டைகளில் நிரப்ப வேண்டிய நிலைக்குத் தயாராகிவிடும் என்பதால், கோதுமை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொடர்பான முடக்கநிலை காரணமாக சணல் ஆலைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால்,  சணல் பைகள் தயாரிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் துறை சேவையில் ஈடுபட்டுள்ள இந்திய உணவுக் கார்ப்பரேஷன், அரசுக் கொள்முதல் நிலையங்களின் தேவைகளுக்கு ஏற்ற எண்ணிக்கையில் சணல் பைகளை அந்த மில்களால் தயாரிக்க முடியவில்லை. எனவே இதில் ஆக்கபூர்வமாக அரசு தலையிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்காக, இடைக்காலத்  தீர்வு அளிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

 (Release ID: 1612163) Visitor Counter : 90