ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

`ஸ்வத் கே சிப்பாஹி' பிரதமரின் பாரதீய ஜன் ஔஷாதி பரியோஜ்னா திட்டத்தின் (PMBJP) கீழ் நோயாளிகள் மற்றும் முதியவர்களின் வீடுகளில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருந்துகள் கிடைக்கச் செய்தல்

Posted On: 07 APR 2020 4:24PM by PIB Chennai

பிரதமரின் மக்கள் மருந்தக மையங்களில் (ஜன் ஔஷாதி கேந்திரா)  உள்ள ‘ஆரோக்கியத்தின் சிப்பாய்’(`ஸ்வத் கே சிப்பாஹி' ) என்று அழைக்கப்படும் மருந்தாளுநர்கள் பிரதமரின் பாரதீய ஜன் ஔஷாதி பரியோஜ்னா திட்டத்தின்  (PMBJP)  கீழ் நோயாளிகள் மற்றும் முதியவர்களின் வீடுகளில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருந்துகளை வழங்கி வருகின்றனர்.

இப்போதைய நிலையில் நாடு முழுக்க 726 மாவட்டங்களில், 6300 மக்கள் மருந்தக மையங்கள்  செயல்பட்டு வருகின்றன. 

21 நாட்கள் முடக்கநிலை அமல் காலத்தில் அத்தியாவசிய மருந்துகளை தேவையானவர்களின்  வீடுகளுக்கே கொண்டு செல்வதை உறுதி செய்வதில் இந்த மையங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.

பொதுத் துறை மருந்து தயாரிப்பு அமைப்பு சமீபத்தில் தெரிவித்தபடி,  ‘ஆரோக்கியத்தின் சிப்பாய்’ - தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். வாரணாசியில் பஹாடியாவில் உள்ள ஜன் ஔஷாதி மையத்திற்கு பாபாவ்த் என்ற மூதாட்டி தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார். அந்த மூதாட்டி வாரணாசியில் தன் கணவருடன் வாழ்ந்து வருகிறார். தினமும் பயன்படுத்தும் மருந்துகள் தீர்ந்துவிட்ட நிலையில் அவர் உதவி கோரினார் என்று இந்த அலுவலர் தெரிவித்தார். அவருடைய உடல்நிலைக்கு இந்த மருந்தை தினமும் அவர் எடுத்துக் கொண்டாக வேண்டும். வயதான அந்தத் தம்பதியினருக்கு உதவாமல் அந்த மருந்தாளுநரால் இருக்க முடியவில்லை. மருந்துகளை எடுத்துச் சென்று அந்த மூதாட்டியின் வீட்டில் ஒப்படைத்தார். அப்போதிருந்து நோயுற்ற மற்றும் வயதானவர்களின் வீடுகளுக்கு சென்று நமது மருந்தாளுநர்கள் மருந்துகளை வழங்கி வருகிறார்கள்.


(Release ID: 1612144) Visitor Counter : 277