பிரதமர் அலுவலகம்

பிரதமர், சுவீடன் பிரதமர் இடையிலான தொலைபேசி உரையாடல்

Posted On: 07 APR 2020 4:59PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திரமோடி, சுவீடன் பிரதமர் திரு.ஸ்டீபன் லோப்வெனுடன் இன்று தொலைபேசி மூலம் உரையாடினார். கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சுகாதார, பொருளாதார தாக்கம் குறித்தும், தத்தம் நாடுகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும், இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியாவுக்கும், சுவீடனுக்கும் இடையே ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் தரவுகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், கொவிட்-19க்கு எதிரான உலக நாடுகளின் முயற்சிகளுக்கும் பங்களிக்கும் ஆற்றல் இருநாடுகளுக்கும் உண்டு என்பதையும் , இதில் ஒத்துழைப்பு தேவை என்பதையும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளால், நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இரு நாடுகளின் குடிமக்களுக்கும், பரஸ்பரம் தேவையான உதவிகளை வழங்க இரு தலைவர்களும் உறுதி அளித்தனர். கொவிட் -19 தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தத் தேவையான மருத்துவப் பொருட்கள் விநியோகம் கிடைக்கச் செய்ய இருநாட்டு அதிகாரிகளும் தொடர்பில் இருக்க வேண்டும் என இரு தலைவர்களும் இசைவு தெரிவித்தனர். ***

(Release ID: 1612017) Visitor Counter : 164