நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
ஒரே நாளில் அதிக உணவு தானியங்கள் போக்குவரத்தில் புதிய சாதனையை செய்தது இந்திய உணவுக் கழகம்
Posted On:
05 APR 2020 7:06PM by PIB Chennai
தேசிய பொது முடக்கத்தின் போது நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் போதிய உணவு தானிய இருப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற தனது முயற்சிகளின் தொடர்ச்சியாக, 1.93 லட்சம் மெட்ரிக் டன்கள் கொண்ட 70 அடுக்குகளை தொடர்ந்து இரு நாட்களுக்கு, அதாவது 03.04.2020 மற்றும் 04.04.20 ஆகிய தேதிகளில், அனுப்பி புதிய சாதனையை படைத்தது இந்திய உணவுக் கழகம்.
பொது முடக்கத்தின் தொடக்கமான 24.03.2020ல் இருந்து 12 நாட்களில், பொது முடக்கத்தின் முந்தைய சராசரியான 0.8 லட்சம் மெட்ரிக் டன்களோடு ஒப்பிடும் போது, ஒரு நாளைக்கு சராசரியாக 1.41 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகம் அனுப்பியுள்ளது. 16.94 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 605 அடுக்குகளில் நாடெங்கிலும் இந்த காலகட்டத்தில் அனுப்பப்பட்டுள்ளது.
(Release ID: 1611531)
Visitor Counter : 118