மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மாணவர்களின் கல்வி நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அறிவுறுத்தியபடி, ஆன்லைன் மூலம் கற்பித்தல் - கற்றல் நடைமுறைகளுக்கு கேந்திரிய வித்யாலயா சங்கதன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது

Posted On: 05 APR 2020 7:36PM by PIB Chennai

கொவிட்-19 அச்சுறுத்தல் பின்னணியில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கல்வி நலன்களை உறுதி செய்யும்படி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் `நிஷாங்க்'  அளித்த அறிவுறுத்தலின்படி, ஆன்லைன் மூலம் கற்பித்தல் - கற்றல் நடைமுறைகளுக்கு கேந்திரிய வித்யாலயா சங்கதன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது

செகன்டரி மற்றும் சீனியர் செகன்டரி வகுப்புகளுக்கு NIOS தளம் - அவர்களின் வகுப்புகளுக்கான SWAYAM PRABHA  தளம் 2020 ஏப்ரல் 7 ஆம் தேதியில் இருந்து செயல்படத் தொடங்கும்.

Skype மற்றும் Web Chat மூலம் மாணவர்கள் நேரடியாகக் கலந்துரையாட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள பரந்த திறந்தநிலை ஆன்லைன் கல்வித் திட்டம், டி.டி.எச் (DTH) சேனல்களில் இலவசத் தொகுப்பில் உள்ள சேனல்கள், யூடியூப் சேனல்கள் போன்ற ஆதார வளங்களும் இதில் பயன்படுத்திக் கொள்ளப்படும்.



(Release ID: 1611526) Visitor Counter : 87