மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கோவிட்-19 தொற்றுக்கு எதிராக போரிட பிரதமர் பாதுகாப்பு நிதியத்துக்கு ரூ 38.91 கோடிக்கும் அதிகமான தொகையை அளித்தன பல்வேறு நிறுவனங்கள் / தன்னாட்சி அமைப்புகள் / மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் துறைகள்
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போரில் இந்தியாவை பலப் படுத்தியதற்கான முயற்சிகளை பாராட்டினார் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்'
प्रविष्टि तिथि:
05 APR 2020 5:48PM by PIB Chennai
கோவிட்-19 தொற்றுக்கு எதிராக போரிட பிரதமர் பாதுகாப்பு நிதியத்துக்கு ரூ 38.91 கோடிக்கும் அதிகமான தொகையை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் 28 பல்வேறு நிறுவனங்கள் / தன்னாட்சி அமைப்புகள்/ அளித்தன. கோவிட்-19 தொற்றுக்கு உடனான போரில் இந்தியாவை பலப்படுத்தியதற்காக அவற்றின் முயற்சிகளை மத்திய மனித வள மேம்பாடு அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' பாராட்டினார். கோவிட்- 19 தொற்றுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு வலிமை மிக்க ஆதரவை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக, தனது ஒரு மாத ஊதியத்தையும், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. ஒரு கோடியையும் பிரதமர் பாதுகாப்பு நிதியத்துக்கு அளித்த மத்திய மனித வள மேம்பாடு அமைச்சர், அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்கள்/ தன்னாட்சி அமைப்புகளை பிரதமர் பாதுகாப்பு நிதியத்துக்கு தங்கள் பங்கை அளிக்கும் படிக் கேட்டுக்கொண்டர்.
மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள்/ தன்னாட்சி அமைப்புகள் பிரதமர் பாதுகாப்பு நிதியத்துக்கு அளித்த நிதி விவரங்களை தெரிந்துக் கொள்ள இங்கே உள்ள இணைய தொடர்பை பார்க்கலாம்.
(रिलीज़ आईडी: 1611522)
आगंतुक पटल : 126