உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

161 டன் சரக்குகளை லைஃப்லைன் உடான் விமானங்கள் நாடெங்கிலும் எடுத்து சென்றன

லைஃப்லைன் உடான் விமானங்கள் குறித்த பொதுத் தகவல்கள் லைஃப்லைன் உடான் இணையதளத்தில் தினமும் பதிவேற்றப்படுகிற

प्रविष्टि तिथि: 05 APR 2020 4:51PM by PIB Chennai

லைஃப்லைன் உடானின் கீழ், ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப் படை, பவன் ஹான்ஸ் மற்றும் தனியார் விமான நிறுவனங்களால் 116 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது வரை 161 டன் சரக்குகள் எடுத்து செல்லப்பட்டுள்ளன. 112,178 கி.மீ வான் தூரத்தை லைஃப்லைன் உடான் விமானங்கள் இது வரை கடந்துள்ளன. சர்வதேச அளவில், விமானப் போக்குவரத்து அமைச்சகமும் ஏர் இந்தியாவும், சீனாவுடன் நெருங்கிப் பணியாற்றி, இரு நாடுகளுக்கிடையே முக்கிய மருத்துவப் பொருள்களின் போக்குவரத்துக்காக ஒரு சரக்கு வான் பாலத்தை ஏற்படுத்தின. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயானமுதல் சரக்கு விமானம் ஏப்ரல் 4 2020 அன்று ஏர் இந்தியாவால் இயக்கப்பட்டு, 21 டன் முக்கிய மருத்துவப் பொருட்களை எடுத்து சென்றது.

நாட்டின் தொலை தூர இடங்களுக்கு அத்தியாவசிய மருத்துவ பொருள்களை எடுத்து சென்று கொவிட்-19க்கு எதிரான இந்தியாவின் போரை வலுப்படுத்துவதற்காக விமானப் போக்குவரத்து அமைச்சகம் 'லைஃப்லைன் உடான்' விமானங்களை இயக்கி வருகிறது.

வட கிழக்குப் பகுதி, தீவுப் பிரதேசங்கள் மற்றும் மலை மாநிலங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. லடாக், திமாபூர், இம்பால், கவுகாத்தி மற்றும் போர்ட் பிளேருக்கு கடைசி மைல் விநியோகத்துக்காக ஏர் இந்தியாவும், இந்திய விமானப் படையும் நெருங்கிப் பணியாற்றுகின்றன.

முகக் கவசங்கள், கையுறைகள் மற்றும் இதர நுகர்பொருள்கள் போன்ற குறைந்த எடை மற்றும் அதிக எடை கொண்ட, விமானத்தில் அதிக இடம் பிடிக்கக் கூடிய பொருள்கள் சரக்கில் பெரும் பங்கு வகிக்கின்றன. போதிய முன்னெச்சரிக்கையோடு, சரக்குகளை பயணிகள் அமரும் இடம் மற்றும் மேலே உள்ள சிற்றறைகளில் வைத்து எடுத்து செல்ல சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


(रिलीज़ आईडी: 1611390) आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada