ரெயில்வே அமைச்சகம்

கொவிட்-19 முடக்க காலகட்டத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சர்க்கரை, உப்பு மற்றும் சமையல் எண்ணெய் சீராக விநியோகிக்கப்படுவதற்கு இந்திய ரெயில்வே உதவுகிறது

23 மார்ச் முதல் 4 ஏப்ரல் 2020 வரை 1,342 சரக்குப் பெட்டிகளில் சர்க்கரை, 958 சரக்குப் பெட்டிகளில் உப்பு, 378 சரக்குப் பெட்டி / டேங்க்குகளில் சமையல் எண்ணெய் ஆகியவற்றை ரெயில்வே எடுத்துச் சென்று உள்ளது

Posted On: 05 APR 2020 3:27PM by PIB Chennai

கொவிட்-19 தொற்றைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படும் முடக்க நிலை காலகட்டத்தில் பொதுமக்களுக்கான சர்க்கரை, உப்பு மற்றும் சமையல் எண்ணெய் விநியோகத்தில் பற்றாக்குறை ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்திய ரெயில்வே அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றுவது, எடுத்துச் செல்வது மற்றும் இறக்குவது போன்ற பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.

 

2020 மார்ச் 23 முதல் ஏப்ரல் 4  வரையிலான 13 நாட்களில் இந்திய ரெயில்வே 1,342 சரக்குப் பெட்டிகளில் சர்க்கரை, 958 சரக்குப் பெட்டிகளில் உப்பு, 378 சரக்குப் பெட்டி / டேங்க்குகளில் எண்ணெய் ஆகியவற்றை ஏற்றி எடுத்துச் சென்று உள்ளது (ஒரு சரக்குப் பெட்டியில் 58-60 டன் எடை கொண்ட பொருட்கள் இருக்கும்). 

 

சரக்குப் போக்குவரத்தை உயர்நிலை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.  தொடக்கத்தில் சரக்குகளை ஏற்றி இறக்கும் போது பல்வேறு முனையங்களில் ரெயில்வே எதிர்கொண்ட பிரச்சனைகள் தற்போது தீர்க்கப்பட்டு வருகின்றன.  உள்துறை அமைச்சகத்துடன் சேர்ந்து இந்திய ரெயில்வேயானது, மாநில அரசுகளுடன் கலந்து பேசி, செயல்பாட்டு பிரச்சனைகள் ஏற்பட்டால் அதற்குத் தீர்வு கண்டு வருகிறது. 

 

****



(Release ID: 1611365) Visitor Counter : 156