அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்-19க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அறுவை சிகிச்சைக் கவசங்களுக்கான குறைந்த செலவிலான வைரஸ் ஒழிப்பு பூச்சு ஒன்றை, ஐ.ஐ.டி. கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

Posted On: 04 APR 2020 5:14PM by PIB Chennai

அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் அறிவியல் மற்றும் பொறியியல் கழகம் (SERB) என்ற சட்டபூர்வ நிறுவனம், கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் மருத்துவ கவசங்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு மருத்துவக் கவச உடைகளில் வைரஸ் தடுப்புப் பூச்சை உருவாக்க ஐ.ஐ.டி. கான்பூர் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு ஆதரவு அளித்து வருகிறது.

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, இது கூடுதல் பாதுகாப்பு அடுக்கு ஒன்றை உருவாக்கும் என்பதால், டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு இது அதிகப் பயன் தருவதாக இருக்கும். பெருமளவில் தயாரிக்கும்போது இதன் விலை குறைவாக இருக்கும் என்பதால் உதவிகரமாக இருக்கும்.

(மேலும் விவரங்களுக்கு டாக்டர் நக்மா பர்வீன் (PI)-ஐ .nagma@iitk.ac.in, செல்போன் எண் : 9474024181... ல் தொடர்பு கொள்ளவும்)

 


(Release ID: 1611238) Visitor Counter : 161