ரெயில்வே அமைச்சகம்
இந்திய அரசின் சுகாதார மேம்பாட்டு முயற்சிகளுக்கு துணையாக முகக்கவசங்கள், கிருமி நாசினிகள் தயாரிப்பில் ரயில்வே
இடுகை இடப்பட்ட நாள்:
03 APR 2020 4:36PM by PIB Chennai
கோவிட்-19 தொற்று பரவுவதைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, இந்திய அரசு மேற்கொண்டு வரும் சுகாதார மேம்பாட்டு பணிகளுக்கு இந்திய ரயில்வே உறுதுணையாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சியில், இந்திய ரயில்வே தனது அனைத்து மண்டல தயாரிப்பு பிரிவுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் முகக்கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகளைத் தயாரித்து வருகிறது.
இந்திய ரயில்வே, ஏப்ரல் 1-ம் தேதி வரை, மொத்தம் 287704 முகக்கவசங்கள், 25806 லிட்டர் கிருமிநாசினி ஆகியவற்றை ரயில்வே மண்டலங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தயாரித்துள்ளது. இதில், சில ரயில்வே மண்டலங்கள் முன்னணியில் உள்ளன. மத்திய ரயில்வே 22580 முகக்கவசங்களையும், 2693 லிட்டர் கிருமிநாசினியையும், மேற்கு ரயில்வே, 46313 முகக்கவசங்களையும், 700 லிட்டர் கிருமிநாசினியையும், வடக்கு மத்திய ரயில்வே, 26567 முகக்கவசங்களையும், 3100 லிட்டர் கிருமிநாசினியையும், கிழக்கு ரயில்வே 14800 முகக்கவசங்களையும், 2620 லிட்டர் கிருமிநாசினியையும் தயாரித்துள்ளன.
(வெளியீட்டு அடையாள எண்: 1610966)
வருகையாளர் எண்ணிக்கை : 126