ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

நெருக்கடியான இந்த காலகட்டத்தில் சிபெட் ஆற்றி வரும் கணிசமான சமுதாய நிவாரணப்பணிகள்

प्रविष्टि तिथि: 01 APR 2020 12:58PM by PIB Chennai

உலக அளவிலான கோவிட்- 19 தொற்று அபாயம் நிலவும், இந்தக் கால கட்டத்தில் ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின், ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ ரசாயனத் துறையின் கீழ் செயல்படும், மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் -  சிபெட், பல்வேறு மாநிலங்களிலும் உள்ள தனது மையங்களின் மூலம், சமுதாய நலனுக்காக பல்வேறு நன்மை தரும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

சிபெட்டின் குவாலியர் மையத்திலுள்ள, கைத்தொழில் பயிற்சி மையம், மாவட்ட நீதிபதி / மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 72 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளும், பணியாளர்களும், அங்குள்ள உதவி மருத்துவக் குழுவினருக்கு ஆதரவான பணிகளில் 24 மணிநேரமும் ஈடுபடுத்தப்படுவார்கள். சிபெட் ஊழியர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து, தங்களது ஒரு நாள் ஊதியத் தொகையான மொத்தம் ரூ. 18 லட்சத்தை பிரதமர் பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்கியிருக்கிறார்கள்.

 

ஏழை மக்களுக்கும், நகரத்தில் குடியேறியவர்களுக்கும், தேவைப் படுபவர்களுக்கும், உணவு வழங்குவதற்காக சிபெட் லக்னோ, அன்னதா நகர் நிகம் நிதி என்ற தானிய வங்கிக்கு ரூ ஐந்து லட்சம் அளித்துள்ளது.

 

***


(रिलीज़ आईडी: 1609930) आगंतुक पटल : 114
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada