மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

தேசிய தேர்வு முகமை நடத்தும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (எழுத்து தேர்வு) ஏப்ரல் -2020 ஒத்திவைப்பு

Posted On: 31 MAR 2020 5:39PM by PIB Chennai

தேசிய தேர்வு முகமை நடத்தும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு [ஜே.இ.இ.] (எழுத்து தேர்வு) ஏப்ரல் -2020ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 18.03.2020 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் இந்த ஜே.இ.இ. பிராதன எழுத்து தேர்வு  5,7,9 மற்றும் 11 ஏப்ரல், 2020 நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய சூழலின் காரணமாக இந்த தேர்வு மே மாதம் இறுதி வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் உள்ள சூழலை பார்த்து சரியான தேதி அறிவிக்கப்படும்.

தற்போதய சூழ்நிலை விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கை தெரிவித்த தேசிய தேர்வு முகமை, இருப்பினும் சூழ்நிலையை நெருக்கமாக கண்காணித்து, தேவைப்பட்டால் இந்த தேர்வு அட்டவணை மேலும் மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதன்படி, அந்த நேர நிலைமையின் அடிப்படையில் தேர்வுக்கான நுழைவு சீட்டுகள், 2020 ஏப்ரல் 15க்கு பிறகு வழங்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in என்ற இணைய தளங்களை தொடர்ந்து பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்களும், அவர்களது பெற்றோர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு, 8287471852, 8178359845, 9650173668, 9599676953, 8882356803 என்ற எங்களை தொடர்பு கொள்ளலாம்.

*****



(Release ID: 1609864) Visitor Counter : 108