தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
தொலைக்காட்சியின் பொற்காலத்தை மீண்டும் கொண்டு வர தூர்தர்ஷன் நடவடிக்கை
தூர்தர்ஷன், மக்களவை தொலைகாட்சி மற்றும் மாநிலங்களவை தொலைகாட்சி ஆகிய சேனல்களை கட்டாயமாக ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்
प्रविष्टि तिथि:
30 MAR 2020 8:32PM by PIB Chennai
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நாடு முடக்கநிலையில் உள்ளதை அடுத்து, மக்கள் தங்கள் வீட்டில் மகிழ்ச்சியாக பொழுது போக்க தனது தொலைக்காட்சியின் பொற்காலத்தை மீண்டும் கொண்டு வர தூர்தர்ஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
சாணக்கியா, உபனிஷத் கங்கா, சக்திமான், ஸ்ரீமான் ஸ்ரீமதி, கிருஷ்ணா காளி போன்ற தொடர்களை ஏப்ரல் முதல் வாரம் முதல் மறு ஒளிபரப்பு செய்ய உள்ளது.
மேலும், இராமாயணம், மகாபாரதம், பியோம்கேஷ் பக்ஷி, சர்கஸ், ஹம் ஹேன் நா, து தோடா மேன் மைனா போன்ற தொடர்கள் மார்ச் 28, 2020 முதல் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
தூர்தர்ஷன், மக்களவை தொலைகாட்சி (லோக்சபா டிவி) மற்றும் மாநிலங்களவை தொலைகாட்சி (ராஜ்யசபா டிவி) ஆகிய சேனல்களை கட்டாயமாக ஒளிபரப்ப வேண்டும் என்று அனைத்து டி.டி.எஹ்ச் மற்றும் கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுரை வெளியிட்டுள்ளது. இதனை மீறுவது, கேபிள் டிவி நெட்வொர்க்ஸ் (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 11, 12 மற்றும் 18 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரியது.
நேயர்கள் இந்த தொலைக்காட்சி சேனல்களை காண முடியவில்லை என்றால் தங்கள் அருகில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலைய இயக்குனரிடமோ அல்லது ddpb.inform[at]gmail[dot]com என்ற மின்னஞ்சலிலோ புகார் செய்யலாம்.
****
(रिलीज़ आईडी: 1609468)
आगंतुक पटल : 209