எரிசக்தி அமைச்சகம்

வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கு எஸ்.ஜே.வி.என். நிறுவனம் ரூ.1 கோடி நிதி

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAR 2020 11:21AM by PIB Chennai

மத்திய மின் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மினிரத்னா பொதுத் துறை நிறுவனமான எஸ்.ஜே.வி.என். லிமிடெட் நிறுவனம், உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ள, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பை சமாளிப்பதற்கு உதவிடும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெருக்கடியான இந்த காலகட்டத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு ரூ.1 கோடி நிதியளிக்க, அந்த நிறுவனம் கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

ஷிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆறு வென்டிலேட்டர்களும், டண்டாவில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் மருத்துவக் கல்லூரிக்கு ஐந்து வென்டிலேட்டர்களும், கானேரியில் உள்ள ராம்புர் மருத்துவமனைக்கு சில வென்டிலேட்டர்களும் வாங்குவதற்கு இந்தத் தொகை செலவிடப்படும் என்று  எஸ்.ஜே.வி.என். லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான நந்தலால் ஷர்மா தெரிவித்துள்ளார். அந்த மருத்துவ நிலையங்களுக்குத் தேவையான முகமறைப்புகள், கிருமிநாசினிகள், கையுறைகள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கும் எஸ்.ஜே.வி.என். நிதியுதவி அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


(வெளியீட்டு அடையாள எண்: 1608524) வருகையாளர் எண்ணிக்கை : 172
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Marathi , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada