பிரதமர் அலுவலகம்

நாடு முழுவதும் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

நமது சூழ்நிலைகளை வெல்வதற்கான மன உறுதியை விழாக்கள் வலுப்படுத்தும் என்று பிரதமர் கூறியுள்ளார்

Posted On: 25 MAR 2020 9:52AM by PIB Chennai

    நாடு முழுவதும் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களையொட்டி மக்களுக்குப்  பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார் .

     "இந்தியா முழுவதும் பல்வேறு விழாக்களை நாம் கொண்டாடுகிறோம் . பாரம்பரிய முறையிலான காலண்டர்படி புத்தாண்டையும் நாம் தொடங்குகிறோம்உகாதிகுடி படவா, நவ்ரே, சாஜிபு செராவ்பா ஆகியவற்றுக்கு வாழ்த்துக்கள்இந்தப் புனித விழாக்கள் நமது வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும்வளத்தையும் கொண்டு வரட்டும்.

     கொவிட்- 19 என்ற கொடிய நோயை எதிர்த்து நமது தேசம் போராடும் காலத்தில் இந்த விழாக்களை நாம் எதிர்நோக்குகிறோம்இந்த விழாக்கள் வழக்கமானதாக இருக்காது .ஆனால், நமது சூழ்நிலைகளை வெல்வதற்கான மன உறுதியை இவை வலுப்படுத்தும் . கொவிட் - 19க்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்

     “மணிப்பூரின் எனது சகோதர சகோதரிகளுக்கு சாஜிபு செராவ்பா  வாழ்த்துகள்ஒவ்வொருவரும் அமைதி மற்றும்  வளத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும். மக்களின் நல்ல ஆரோக்கியத்திற்கான சிறப்பு பிரார்த்தனைகள்.

  நவ்ரே முபாரக்!     
இந்த விழா ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியால் நிறைக்கட்டும்.

   கொவிட் - 19க்கு எதிராக தேசம் எதிர்நோக்கியுள்ள முக்கியமான போரில் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைய முன்வருவோம்இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

*****



(Release ID: 1608046) Visitor Counter : 181