சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட் 19 தற்போதைய நிலை: தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள், அறிவுரைகள்
Posted On:
17 MAR 2020 8:05PM by PIB Chennai
பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளின் அதிகாரிகள் கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர் கோவிட் 19 பற்றி ஆய்வு செய்தார். சமூகத்தில் இருந்து விலகியிருத்தல் குறித்து, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் விரிவான வழிகாட்டுதலை அமலாக்குவது பற்றி இந்தக் கூட்டத்தில் அவர் வலியுறுத்தினார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சமூகத்தில் இருந்து விலகியிருத்தல் மிக முக்கிய தாக்கத்தை உண்டாக்கும் என்று அவர் கூறினார். தனிமைப்படுத்தி வைப்பதற்கான இடங்கள், மருத்துவமனை நிர்வாகம், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்கு மாநிலங்களின் தயாரிப்பு குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே தீவிரமான, இடைவெளியற்ற ஒத்துழைப்பை உறுதிசெய்ய இணைச் செயலாளர் நிலையிலும், அதற்கு மேலும் உள்ள 30 அதிகாரிகள், பல்வேறு அமைச்சகங்களின் தொடர்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால், அதனை இவர்கள் ஒருங்கிணைத்து உதவுவார்கள். மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இவர்கள் தயாரிப்புப் பணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அதிகாரிகளுடன் ஒத்துழைப்பார்கள்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள பல்வேறு வழிகாட்டுதல்கள் / அறிகுறிகள் ஆகியவற்றை மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் / துறைகளும் அவற்றின் கீழ் உள்ள அமைப்புகளும் பொருத்தமானவற்றை அமலாக்குமாறு இவற்றின் செயலாளர்களுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
2020 மார்ச் 11, 2020 மார்ச் 16 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட பயண அறிவுரைகளைத் தொடர்ந்து, கூடுதல் அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
I. ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகியவற்றில் இருந்து இந்தியாவுக்கு பயணிகள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
II. இந்த நடவடிக்கை தற்காலிகமானது ஆகும். 2020 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் இது பின்னர் மறு ஆய்வு செய்யப்படும்.
· கோவிட் 19-ன் மருத்துவ நிர்வாக வழிகாட்டுதல்கள் படி, நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிவது, நோய் தொற்று தடுப்பை அமலாக்குவது, கட்டுப்பாட்டு நடைமுறைகள் திருத்தி அமைக்கப்படுதல்.
· இறந்த உடலை நிர்வாகம் செய்வதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. நோய் தொற்றை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், இறந்த உடலை கையாண்டு நோய் தொற்று இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.
· கோவிட் 19-க்கான பரிசோதனைகளுக்கு தனியார் துறை சோதனைக் கூடங்களுக்கும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
· ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்படி, தகுதியான மருத்துவரால் பரிந்துரை செய்தால் மட்டுமே, சோதனைக்கூடத்தில் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
· மத்திய அரசின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின்படி, தனியார் பரிசோதனைக் கூடங்கள் அனைத்தும் உடனடியாகவும், துல்லியமானதாகவும், ரிப்போர்ட் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
· கோவிட் 19 நோய் கண்டறிதலுக்கு தனியார் பரிசோதனைக் கூடங்கள் கட்டணம் வசூலிக்கக்கூடாது என ஐ.சி.எம்.ஆர் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களை www.mohfw.gov.in என்ற இணைய தளத்தில் காணலாம்.
*****************
(Release ID: 1607008)
Visitor Counter : 201