சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நோவல் கொரோனா வைரஸ் நோய் (கொவிட்-19) குறித்த கூடுதல் பயண அறிவுரை
Posted On:
17 MAR 2020 10:29AM by PIB Chennai
மார்ச் 11, 2020 மற்றும் மார்ச் 16, 2020 தேதிகளில் வெளியிடப்பட்ட பயண அறிவுரைகளின் தொடர்ச்சியாக, கீழ்காணும் அறிவுரைகள் கூடுதலாக வெளியிடப்படுகிறது:
- ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியாவிற்கு வருவதற்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. இந்த நாடுகளிலிருந்து எந்த விமானமும் இந்திய நேரப்படி 15.00 மணிக்கு பிறகு இந்தியாவுக்கு புறப்படாது. விமான நிறுவனங்கள் புறப்படும் இடத்திலிருந்து இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- இந்த அறிவுரை ஒரு தற்காலிகமானது என்பதோடு, 31 மார்ச் 2020 வரை செயல்பாட்டில் இருக்கும். அதன் பிறகு இது மறுஆய்வு செய்யப்படும்.
***********
(Release ID: 1606677)
Visitor Counter : 221