பிரதமர் அலுவலகம்

வடகிழக்கு பிராந்தியம் நாட்டின் முக்கிய வளர்ச்சிப் பகுதியாக மாறிவருகிறது என பிரதமர் கூறினார்

பல ஆண்டுகளாக நிலவிவந்த போடோ பிரச்சினைக்கு அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து தீர்வு
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மக்களவையில் பிரதமர் பதிலளித்தார்

Posted On: 06 FEB 2020 5:48PM by PIB Chennai

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு  நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது நடந்த விவாதத்திற்கு பதிலளித்த பிரதமர், வடகிழக்குப் பிராந்தியம் இனி புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இராது என்று கூறினார். 

அரசு பல்வேறு பிரிவுகளில் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக தற்போது வடகிழக்குப் பிராந்தியம் நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சிப் பகுதியாக மாறியுள்ளது என அவர் தெரிவித்தார்.

“வடகிழக்குப் பகுதி மக்கள் இப்போது தில்லி வெகு தொலைவு என உணரமாட்டார்கள். தற்போது அரசு அவர்களது வாசலுக்கே வந்துவிட்டது.  நமது அமைச்சர்களும், அதிகாரிகளும் அந்த பிராந்தியத்திற்கு அடிக்கடி சென்று வருகின்றனர்” என்று அவர் கூறினார்.

மின்சார வசதி, ரயில்வே தொடர்பு, தொலைபேசி வசதி ஆகியவற்றை வழங்குவதுடன், பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளையும் தமது அரசு எடுத்து வருவதாக பிரதமர் கூறினார்.  

அண்மையில் கையெழுத்திடப்பட்ட போடோ ஒப்பந்தம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் ஒன்று சேர்த்து பல பத்தாண்டுகளாக நிலவிய சிக்கலுக்கு தீர்வு காண உண்மையான முயற்சியுடன் இது மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தார். 

இந்தச் சிக்கலைத் தள்ளிப்போட்டு வந்ததன் விளைவாக, கடந்த பல பத்தாண்டுகளாக ஏற்பட்ட கிளர்ச்சியால், குறைந்தபட்சம் 40,000 பேர் உயிரிழந்தனர் என்று பிரதமர் தெரிவித்தார். 

“இருப்பினும், இம்முறை நாங்கள் அனைத்துத் தரப்பினரையும் ஒன்று சேர்த்தோம்.  இனி நிலுவையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை ஒப்பந்தம் தெளிவுப்படுத்தியுள்ளது” என்று அவர் கூறினார். 

******************


(Release ID: 1602439) Visitor Counter : 270