மத்திய அமைச்சரவை

மகாராஷ்டிராவில் வதவான் என்னும் இடத்தில் புதிய பெரிய துறைமுகம் அமைப்பதற்காக கொள்கை அளவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 05 FEB 2020 1:47PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மகாராஷ்டிரா மாநிலம் தகானுவுக்கு அருகே வதவான் என்னும் இடத்தில் முக்கிய துறைமுகம் ஒன்றை அமைப்பதற்காக கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.65,544.54 கோடியாக இருக்கும்.

வதவான் துறைமுகம் உருவாக்கப்பட்டு, அதை இயக்குவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு   குத்தகைக்கு விடப்படும்.  இத்திட்டத்தை செயல்படுத்த சரிபாதி அல்லது அதற்கு மேல் பங்குகளை கொண்ட முக்கிய பங்கேற்பு நிறுவனமாக ஜவஹர்லால் நேரு துறைமுகம் இருக்கும்.  இதற்காக சிறப்பு நோக்க அமைப்பு ஒன்று உருவாக்கப்படும். இந்த அமைப்பு  துறைமுகத்தின் உள்கட்டமைப்புகளை உருவாக்க உதவும்.  துறைமுகத்தின் அனைத்து விதமான வர்த்தக நடவடிக்கைகளும் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் நடைபெறும்.  வதவான் துறைமுகம் உருவாக்கப்படுவதால் உலகின் முன்னோடி கண்டெய்னர் துறைமுகங்கள் 10-ல் இந்தியாவும் ஒன்றாக திகழும். 

இயற்கை துறைமுகமாக  அது உருவாக இருப்பதால், மிகப்பெரிய கப்பல்களை கையாள முடியும். 

********************



(Release ID: 1602043) Visitor Counter : 191