மத்திய அமைச்சரவை

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சட்ட (திருத்த) மசோதா, 2020-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 05 FEB 2020 1:44PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பின்வருவனவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. 

1.  இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதா 2020-ஐ அறிமுகம் செய்தல்.

2.    20 ஐஐஐடி (பிபிபி)-ல் தலா ஒன்று வீதமும், ஐஐடிடிஎம் கர்னூலில் ஒன்றுமாக 21 இயக்குநர்கள் பணியிடங்களுக்கான ஒப்பந்தம்.

3.    20 ஐஐஐடி (பிபிபி)-ல் தலா ஒன்று வீதமும், ஐஐடிடிஎம் கர்னூலில் ஒன்றுமாக 21 பதிவாளர்கள் பணியிடங்களுக்கான ஒப்பந்தம்.

தாக்கம்

தற்போதுள்ள 15 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் எஞ்சிய 5 நிறுவனங்களை பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டாண்மையுடன், பட்டங்களை வழங்குவதற்கான அதிகாரங்களுடன் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அறிவிக்க மசோதா வகைசெய்யும். இளநிலை தொழில்நுட்பம் (பி.டெக்) அல்லது முதுநிலை தொழில்நுட்பம் (எம்.டெக்) அல்லது பிஹெச்டி பட்டங்களை, பல்கலைக் கழகம் அல்லது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் வழங்குவது போல இந்த நிறுவனங்களுக்கும் அங்கீகாரம் அளிக்க இந்த மசோதா வகை செய்யும். தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் வலுவான ஆராய்ச்சித் தளத்தை உருவாக்க தேவையான போதுமான மாணவர்களை ஈர்ப்பதற்கும் இந்த நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும்.

விவரங்கள்

1. 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டின் முந்தைய சட்டங்களில் திருத்தம்  செய்வதற்காக இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்திருத்த மசோதா 2020 அறிமுகம் செய்யப்படுகிறது.

2. பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டாண்மையில், சூரத், போபால், பாகல்பூர், அகர்தலா, ராய்ச்சூர் ஆகிய 5 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு  சட்டப்பூர்வமான அந்தஸ்து வழங்கப்படுவதுடன், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (பொதுத் துறை – தனியார் கூட்டாண்மை) சட்டம் 2017-ன்கீழ் ஏற்கனவே இயங்கும் 15 நிறுவனங்களுடன், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் என்று  அறிவிக்கப்படும்.

சூரத், போபால், பாகல்பூர், அகர்தலா, ராய்ச்சூரில் ஐஐஐடி-க்களை அமைப்பதே அங்கீகாரம் வழங்குவதன் நோக்கமாகும்.   இந்த ஐஐஐடி-க்கள் ஏற்கனவே சொசைட்டிஸ் பதிவுச்சட்டம் 1860-ன்கீழ் பதிவு செய்யப்பட்ட சொசைட்டிகளாக இயங்கி வருகின்றன.  அவை, இதர 15  ஐஐஐடி-க்களை போல, ஐஐஐடி (பிபிபி) சட்டம் 2017-ன் கீழ் கொண்டு வரப்படும்.  மேலும், ஐஐஐடி டிஎம் கர்னூல் 2014 ஐஐஐடி சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.  அது அலகாபாத் ஐஐஐடி, குவாலியர் ஐஐஐடிஎம், ஜபல்பூர் ஐஐஐடி டிஎம், காஞ்சிபுரம் ஐஐஐடி டிஎம் ஆகிய நான்கு நிறுவனங்களுடன் சேர்ந்து இயங்கி வருகிறது.  இந்த நிறுவனங்களில் ஏற்கனவே இயக்குநர் மற்றும் பதிவாளர் பணியிடங்கள் உள்ளன.  அவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு இல்லாமல் முறைப்படுத்தப்படும்.

***************



(Release ID: 1602041) Visitor Counter : 185