மத்திய அமைச்சரவை

2017-18-க்குப் பிந்தைய காலத்திற்குப் பெரிய துறைமுகப் பொறுப்பு கழகங்கள் மற்றும் கப்பல்தள தொழிலாளர் வாரிய ஊழியர்கள் / தொழிலாளர்களுக்கு உற்பத்தித் திறனுடன் இணைந்த வெகுமதித் திட்டத்தை நீடிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 29 JAN 2020 4:06PM by PIB Chennai

2017-18-க்குப் பிந்தைய காலத்திற்குத் தற்போதுள்ள உற்பத்தித் திறனுடன் இணைந்த வெகுமதித் திட்டத்தில் மாற்றம் / திருத்தம் செய்யும்வரை அதனை நீடிப்பதற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்துள்ளது.

      பெரிய துறைமுகப் பொறுப்புக் கழகங்கள் மற்றும் கப்பல்தளங்களின் 28,821 ஊழியர்கள் / தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைவார்கள்.  இதற்கு ரூ.46 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. போனஸ் பெறுவதற்கு மாத ஊதியம் ரூ.7000 என்ற தற்போதைய உச்சவரம்பைப்போல், உற்பத்தித் திறனுடன் இணைந்த வெகுமதிக்கும் கணக்கிடப்படும்.  இந்தத் திட்டம் சிறந்த உற்பத்தித் திறனுக்கு ஊக்கமளிப்பதோடு, தொழில் உறவையும், இணக்கமான பணிச்சூழ்நிலையையும் மேம்படுத்தும்.

பெரிய துறைமுகப் பொறுப்பு கழகங்கள் மற்றும் கப்பல்தளங்களின் ஊழியர்கள் / தொழிலாளர்களுக்கு உற்பத்தித் திறனுடன் இணைந்த வெகுமதித் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.  துறைமுகங்களின் செயல்பாட்டுக் குறியீட்டு எண் அடிப்படையில் (அகில இந்திய செயல்பாட்டுக்கான கணக்கீடு 50% ஒவ்வொரு துறைமுகத்தின் செயல்பாட்டுக்கான கணக்கீடு 50% ஆண்டுதோறும் உற்பத்தித் திறனுடன் இணைந்த வெகுமதி வழங்கப்படுகிறது. இது பெரிய துறைமுகப் பொறுப்புக் கழகங்களின் நிர்வாகத்திற்கும், தொழிலாளர் கூட்டமைப்புகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டது.

 

*****



(Release ID: 1600990) Visitor Counter : 152