மத்திய அமைச்சரவை
இந்தியா-பிரேசில் இடையே மழலைப் பருவத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
22 JAN 2020 3:33PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கும், பிரேசில் நாட்டின் குடியுரிமை அமைச்சகத்திற்கும் இடையே, மழலைப் பருவ துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்காக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
பயன்கள்
மழலைப் பருவத்தினர் ஆரோக்கியம் குறித்த விஷயத்தில், இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை இது வலுப்படுத்தும். மழலைப் பருவத்தினரின் ஆரோக்கியத்திற்காக இருநாடுகளிலும் மேற்கொள்ளப்படும் சிறப்பான நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதன்மூலம், இருநாடுகளும் பயனடையும்.
******
(रिलीज़ आईडी: 1600207)
आगंतुक पटल : 145