மத்திய அமைச்சரவை
இந்தியாவுக்கும். பிரான்சுக்கும் இடையே குடிபெயர்வு மற்றும் தற்காலிக மக்கள் போக்குவரத்து ஒத்துழைப்பு உடன்பாடு உறுதி செய்யப்பட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
08 JAN 2020 3:13PM by PIB Chennai
இந்தியாவுக்கும். பிரான்சுக்கும் இடையே குடிபெயர்வு மற்றும் தற்காலிக மக்கள் போக்குவரத்து ஒத்துழைப்பு உடன்பாடு உறுதி செய்யப்பட்டதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2018 மார்ச் மாதம் பிரான்ஸ் அதிபர் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது இந்த உடன்பாடு கையெழுத்தானது.
இரு நாடுகளின் மக்கள் தொடர்புகளை மேம்படுத்துதல், மாணவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பயிற்சி பெற்ற தொழில் புரிவோர் ஆகியோர் தற்காலிகமாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு சென்று வருவதை எளிமையாக்குதல் ஆகியவற்றில் இந்த உடன்பாடு முக்கிய திருப்பமாக அமைகிறது. பிரான்ஸ் நாட்டுடன் விரைவாக விரிவடைந்து வரும் இந்தியாவின் பன்முக உறவுகளின் அடையாள சின்னமாக இந்த உடன்பாடு அமைகிறது. இரு தரப்புக்கும் இடையே அதிகரித்து வரும் நம்பிக்கையின் அடையாளமாகவும் இது திகழ்கிறது.
இந்த உடன்பாடு முதலில் 7 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். தானாகவே புதுப்பித்துக் கொள்ளும் அம்சமும் இந்த உடன்பாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. கூட்டுப் பணிக்குழு மூலமான கண்காணிப்பு அமைப்புக்கும் இதில் வகை செய்யப்பட்டுள்ளது.
****
(Release ID: 1598794)
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam