மத்திய அமைச்சரவை

வங்காள கிழக்கத்திய எல்லை விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 24 DEC 2019 4:29PM by PIB Chennai

வங்காள கிழக்கத்திய எல்லை விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கான, அரசியலமைப்புச் சட்டத்தின்  372-வது பிரிவின் உட்பிரிவு 2-ன் கீழ் குடியரசுத் தலைவர் பிறப்பித்த  சட்டங்கள் ஏற்பு (திருத்த) ஆணை 2019-க்கு, பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதலை வழங்கியுள்ளது.

இந்த அறிவிக்கை, வங்காள கிழக்கத்திய எல்லை விதிமுறைகளை மணிப்பூர் மாநிலத்திற்கும் விரிவுபடுத்தி, அங்குள்ள பூர்வகுடி மக்களுக்கு 2019 குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளிலிருந்து பாதுகாப்பை வழங்கவும், தேவைப்படும் மாற்றங்களை செய்யவும் வழிவகுக்கிறது.

 

***********


(வெளியீட்டு அடையாள எண்: 1597432) வருகையாளர் எண்ணிக்கை : 130
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu , Kannada , Malayalam