மத்திய அமைச்சரவை

இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளுக்கு இடையே உயிரி எரிசக்தி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 24 DEC 2019 4:36PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளுக்கு இடையிலான உயிரி எரிசக்தி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

உலகிலேயே இந்தியாவும், பிரேசிலும் எரிசக்தியை பயன்படுத்துவதில் முக்கிய நாடுகளாக உள்ளன. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதி முழுவதற்குமான இந்தியாவின் முக்கிய வர்த்தக பங்குதாரராக பிரேசில் உள்ளது.

2016 ஆம் ஆண்டில் இந்தியாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி மற்றும் பிரேசில் அதிபர் உடனான சந்திப்பில், இரு தரப்பிலும் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி மேம்பாடு, ஆராய்ச்சியிலும் மற்றும் 2-வது தலைமுறைக்கான உயிரி எரிபொருள் துறையிலும் ஒத்துழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

 

******(Release ID: 1597430) Visitor Counter : 126