மத்திய அமைச்சரவை

வலுவான நிதிநிலையில் உள்ள வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள் / வீட்டு வசதி நிதிநிறுவனங்களின் மதிப்புமிக்க சொத்துக்களை பொதுத்துறை வங்கிகள் வாங்குவதற்கான “பகுதியளவு கடன் உத்தரவாத திட்டத்திற்கு” மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 11 DEC 2019 6:15PM by PIB Chennai

பிரதமர்  திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கீழ்கண்டவற்றிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது:

i. வலுவான நிதிநிலையில் உள்ள வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள் / வீட்டு வசதி நிதிநிறுவனங்களின் மதிப்புமிக்க சொத்துக்களை வாங்குவதில், பொதுத்துறை வங்கிகளுக்கு உதவுவதற்கான “பகுதியளவு கடன் உத்தரவாத திட்டம்” ஒன்று, மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ், வங்கிகளால் வாங்கப்படும் சொத்துக்களின் நியாயமான மதிப்பில், 10 சதவீதம் வரையிலான முதலாவது இழப்பு வரை, ஒட்டுமொத்த உத்தரவாதம் அளிக்கத் தேவையான தொகை அல்லது, ரூ.10,000 கோடி, இதில் எது குறைவானதோ அந்தத் தொகை, மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை ஒப்புக் கொண்டபடி வழங்கப்படும். 01.08.2018-க்கு முந்தைய ஓராண்டு காலத்தில், தனிக் குறியிடப்பட்ட கணக்கின்கீழ் கொண்டுவரப்பட்ட, வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள் / வீட்டுவசதி நிதிநிறுவனங்கள் மற்றும் “BBB+” அல்லது அதற்கு மேற்பட்ட குறியிடப்பட்ட சொத்துக்கள், இத்திட்டத்தின்கீழ் வரும்.

ii. மத்திய அரசின் பகுதியளவு ஒருமுறை கடன் உத்தரவாதம் அளிக்கும் திட்டம், 2020, ஜுன் 30-வரை அல்லது வங்கிகளால் ரூ.1,00,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கப்படும் வரையிலான காலகட்டத்தில் எது முன்கூட்டி வருகிறதோ, அதுவரை செயல்பாட்டில் இருக்கும். திட்டத்தின் முன்னேற்றம் அடிப்படையில், திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலஅவகாசத்தை 3 மாதங்கள் வரை நீட்டிப்பதற்கான அதிகாரம், நிதியமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய விளைவு

      இந்த உத்தேச அரசு கடன் உத்தரவாத ஆதரவும், அதன்மூலம் சொத்துக்கள் வாங்கப்படுவதும், வங்கியல்லாத நிதிநிறுவனங்கள் / வீட்டுவசதி நிதிநிறுவனங்கள், தங்களது தற்காலிக நிதித் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளுதல் அல்லது பொருந்தாத ரொக்க வரவு பிரச்சினைகள் மற்றும் கடன் உருவாக்கத்தில் தொடர்ந்து பங்களிப்பை வழங்கவும், கடன்தாரர்களுக்கு கடைசிவரை கடனுதவி வழங்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவிகரமாக இருக்கும்.

******


(Release ID: 1596123) Visitor Counter : 215