மத்திய அமைச்சரவை

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், அடிப்படை கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிதி திரட்டவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 11 DEC 2019 6:11PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், செபி அமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு, அடிப்படை கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளையை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு அதிகாரம் அளிப்பதென்ற,  சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், ஓராண்டு காலத்திற்கு சுங்கக் கட்டணத்தை வசூலித்து முடித்த, தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு நிதி திரட்டவும், அடையாளம் காணப்பட்ட நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணத்தை நிர்ணயிக்கவும் இது வகை செய்கிறது.

      தற்போதுள்ள நிதி ஆதாரம் குறைவாக இருப்பதால், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் போன்ற அமைப்புகள் புதிய நவீன நிதி ஆதாரத் திரட்டலுக்கு செல்வது தவிர்க்க முடியாததாகும். இந்த ஆணையம் சிறப்பு வழிகள் மூலம் நிதி திரட்டவும் சுங்கம் வசூலித்தல், இயக்குதல், மாற்றித்தருதல் போன்ற கட்டமைப்பை ஏற்படுத்தவும் அடிப்படை கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளையை நிறுவவும் பரிசீலிக்க வேண்டும் என்று 2018-19 பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் கூறியிருந்தார். 

 

****



(Release ID: 1596024) Visitor Counter : 172