பிரதமர் அலுவலகம்

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கார்ட்டோசாட் -3 செயற்கைக்கோளை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி - சி 47 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 27 NOV 2019 12:08PM by PIB Chennai

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கார்ட்டோசாட் -3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 12க்கும் மேற்பட்ட நானோ செயற்கைக் கோள்களை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி - சி 47 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக ஒட்டுமொத்த இஸ்ரோ குழுவினருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கார்ட்டோசாட் -3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 12க்கும் மேற்பட்ட நானோ செயற்கைக் கோள்களை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி - சி 47 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக, ஒட்டுமொத்த இஸ்ரோ குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

அதிநவீன கார்ட்டோசாட் – 3, உயர் தெளிவுமிக்க புகைப்படம் எடுக்கும் நமது திறமையை அதிகரிக்க உதவும். இஸ்ரோ மீண்டும் ஒருமுறை நாட்டிற்கு பெருமிதம் தேடித்தந்துள்ளது” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கார்ட்டோசாட் -3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 12க்கும் மேற்பட்ட நானோ செயற்கைக் கோள்களை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி - சி 47 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக, ஒட்டுமொத்த இஸ்ரோ குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். @narendramodi

 

அதிநவீன கார்ட்டோசாட் – 3, உயர் தெளிவுமிக்க புகைப்படம் எடுக்கும் நமது திறமையை அதிகரிக்க உதவும். இஸ்ரோ மீண்டும் ஒருமுறை நாட்டிற்கு பெருமிதம் தேடித்தந்துள்ளது” @narendramodi

 

                                                                        *****


(Release ID: 1593691) Visitor Counter : 175