மத்திய அமைச்சரவை

கப்பல்கள் மறுசுழற்சி மசோதா 2019-ஐ சட்டமாக்கும் யோசனைக்கும் பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கப்பல்களை மறுசுழற்சி செய்வதற்கான 2009- ஹாங்காங் சர்வதேச பிரகடனத்தை ஏற்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 20 NOV 2019 10:38PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் கப்பல்கள் மறுசுழற்சி மசோதா 2019-ஐ சட்டமாக்கும் யோசனைக்கும் பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கப்பல்களை மறுசுழற்சி செய்வதற்கான 2009- ஹாங்காங் சர்வதேச பிரகடனத்தை ஏற்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.

 

பயன்கள்:

 

  • இந்த மசோதாவின்படி கப்பல்கள் மறுசுழற்சி வசதிக்கு அனுமதி பெறுவது அவசியமாகிறது. இத்தகைய அனுமதிக்குப்பின்னரே கப்பல்களை மறுசுழற்சி செய்ய முடியும்.

 

  • குறிப்பிட்ட வகையான கப்பலுக்குரிய மறுசுழற்சி திட்டத்திற்கு ஏற்ப, மறுசுழற்சி செய்வதற்கும் இந்த மசோதா வகை செய்கிறது. இந்தியாவின் கப்பல்களை மறுசுழற்சி செய்யும்போது, ஹாங்காங் மாநாட்டின்படி, மறுசுழற்சிக்குத் தயார் என்பதற்கான சான்றிதழ் பெறுவது அவசியமாகும்.

 

முக்கிய அம்சங்கள்:

 

  • கப்பல்களை மறுசுழற்சி செய்வதற்கு சர்வதேச தரத்தை உருவாக்கி முறைப்படுத்தவும், இத்தகைய தரத்தை அமலாக்குவதற்கு சட்டப்பூர்வ அமைப்பை உருவாக்கவும் கப்பல் மறுசுழற்சி மசோதா 2019-ஐ சட்டமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

பின்னணி :

 

  • கப்பல்கள் மறுசுழற்சியில், 30 சதவீத பங்குடன் உலக அளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. 2018-ஆம் ஆண்டின் கடல்வழிப் போக்குவரத்து ஆய்வறிக்கையின்படி, 2017ஆம் ஆண்டு இந்தியா 6,323 டன் எடை கொண்ட கப்பல்கள் உடைக்கப்பட்டுள்ளன.

 

  • கப்பல்கள் மறுசுழற்சித் தொழில் அதிகப்படியான பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு தருவது; இருப்பினும், சுற்றுச்சூழல் சம்பந்தமான பாதிப்பை ஏற்படுத்துவது.

 

                  *****


(Release ID: 1592710) Visitor Counter : 214