பிரதமர் அலுவலகம்

74-ஆவது ஐ நா பொதுச்சபைக் கூட்டத்திற்கு இடையே சைப்ரஸ் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

प्रविष्टि तिथि: 26 SEP 2019 11:10PM by PIB Chennai

ஐ நா பொதுச்சபையின் 74-ஆவது அமர்வில் நடந்த உயர்மட்டப் பிரிவுக் கூட்டத்திற்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, சைப்ரஸ் குடியரசின் அதிபர் திரு நிக்கோஸ் அனஸ்டாசியேட்ஸை சந்தித்தார்.

2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியக் குடியரசுத் தலைவர் மேற்கொண்ட சைப்ரஸ் பயணத்தின் தொடர்ச்சியாக இருதரப்பு உறவுகளின் விரிவான முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

2018-19 இருதரப்பு வர்த்தகம் 464 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இருதரப்பு வர்த்தகத்தின் அளவை பெருமளவுக்கு உயர்த்த வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். வர்த்தகமும், முதலீடும் இரண்டு நாடுகளின் பொருளாதாரத்துக்கு கணிசமான ஆற்றலையும், வலிமையையும் அளித்துள்ளது.

ஐ நா பாதுகாப்புச் சபை  விரிவாக்கப்படும்போது, இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பு நாடு என்ற அந்தஸ்து கிடைக்கவும், அணுசக்தி விநியோகக்குழு மற்றும் இதர சர்வதேச அமைப்புகளிலும் இந்தியாவுக்கு இடம் கிடைக்கவும் ஆதரவு அளித்த சைப்ரஸ் அரசுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். சைப்ரஸ் குடியரசின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை, சுதந்திரத்துக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச பயங்கரவாத விஷயம் உட்பட பிராந்திய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் சேருமாறு அதிபர் அனஸ்டாசியேட்ஸ்-க்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.


(रिलीज़ आईडी: 1586419) आगंतुक पटल : 164
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada