பிரதமர் அலுவலகம்

கிழக்கு பொருளாதார அமைப்புக் கூட்டத்தில் பங்கேற்க ரஷ்யாவில் உள்ள விளாடிவொஸ்தக் பயணத்திற்கு முன்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

Posted On: 03 SEP 2019 3:53PM by PIB Chennai

2019 செப்டம்பர் 4, 5 தேதிகளில் நான் ரஷ்யாவின் விளாடிவொஸ்தக் நகருக்கு பயணம் மேற்கொள்கிறேன்.

 

ரஷ்யாவின் தூரக்கிழக்கு பிராந்தியத்திற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் முதன் முறையாக மேற்கொள்ளும் பயணமாக இது அமைகிறது. வளர்ச்சியடைந்து வரும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பலதுறைகளில், உறவை மேம்படுத்தும் இருதரப்பு விருப்பத்தை பூர்த்தி செய்வதாகவும் இந்தப் பயணம் அமையும்.

 

எனது பயணம் இரண்டு நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படுகிறது.     ரஷ்யக் கூட்டமைப்பின் அதிபர் திரு விளாடிமிர் புடின் அழைப்பின் பேரில் ஐந்தாவது கிழக்குப் பொருளாதார அமைப்புக் கூட்டத்தின் தலைமை விருந்தினராக அவர் கலந்துகொள்வது,  அவருடன் 20-வது இந்திய – ரஷ்ய வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பது ஆகியவை பயணத்தின் நோக்கங்களாகும்.   ரஷ்யாவின் தூரக்கிழக்குப் பிராந்தியத்தின் தொழில் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்து இந்த அமைப்பு கவனம் செலுத்தும். இந்தப் பிராந்தியத்தில், இந்தியா – ரஷ்யா இடையே பரஸ்பரம் நலன் சார்ந்த நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான ஆற்றல் வளத்தை  இந்த அமைப்பு வழங்கும். 

 

நமது இரண்டு நாடுகளும் கொண்டாடி வரும் நல்லுறவு, சிறப்பான, சுதந்திரமான உத்திகளைக் கொண்ட கூட்டாண்மையின் வலுவான அடிப்படையிலானது. பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, அமைதிக்காக விண்வெளியைப் பயன்படுத்துவது உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் விரிவான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளில் இருநாடுகளும் அபரிதமான வளர்ச்சியடைந்து வருகின்றன.

 

நமது வலுவான கூட்டாண்மை பலதுருவ உலகை  ஏற்படுத்தும் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.  பிராந்திய மற்றும் பலமுனை அமைப்புகளில் இந்தக் குறிக்கோளை எட்டும் வகையில் இருநாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்பை அளித்து வருகின்றன.

 

இருதரப்பு கூட்டாண்மையின் முழுமையான வரம்பு மற்றும் பரஸ்பரம் நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்து எனது நண்பர் அதிபர் புடினுடன் விவாதிப்பதை நான் எதிர்நோக்கியுள்ளேன். கிழக்குப் பொருளாதார அமைப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மற்ற உலகத் தலைவர்களுடனான சந்திப்பு மற்றும் கூட்டத்தில் பங்கேற்கும் இந்திய தொழில் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதையும் நான் எதிர்நோக்கியுள்ளேன்.   

------



(Release ID: 1583985) Visitor Counter : 148